ETV Bharat / state

போக்குவரத்து சின்னல் விதி மீறல்.. ஃபைன் வசூல் செய்வது குறித்து போலீசார் நூதன விழிப்புணர்வு! - சென்னை போக்குவரத்து போலீஸ்

சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் அபராதம் தொடர்பாக பொம்மைகளை வைத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 12, 2023, 7:27 PM IST

மனித பொம்மைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்

சென்னை: பொதுமக்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் போது அவர்களுக்கு எந்த மாதிரியான அபராதங்கள் விதிக்கப்படுகிறது என்பது தொடர்பாக வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டிவேல், பொம்மைகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இது தொடர்பாக காவல் ஆய்வாளர் பாண்டி வேல் கூறியதாவது, “போக்குவரத்து சிக்னலில் ஸ்டாப் லைன் என்கிற கோட்டிற்கு முன்னதாக வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். ஆனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஸ்டாப் லைன் தாண்டி நிற்பது மட்டுமில்லாமல் சிவப்பு சிக்னல் போட்ட பிறகும் வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இதனைப் போக்குவரத்து காவல்துறையினர் அவர்களுடைய செல்போன் மூலமாகப் புகைப்படம் எடுத்து அபராத தொகையினை விதித்து வருகின்றனர். இருப்பினும் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் ஸ்டாப் லைன் தாண்டி நிற்கும் வாகனங்கள், அதேபோன்று போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களைத் தானாகப் புகைப்படம் எடுத்து அபராத தொகையினை அந்த வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்குக் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பி விடுகிறது.

இதற்கு அடுத்தபடியாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய காவல் ஆய்வாளர்களிடம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வந்துவிட்டது என பொதுமக்கள் புகார்களாகக் கொடுக்கின்றனர். தானியங்கி கேமராக்கள் பொருத்தவரை போக்குவரத்து சிக்னலில் தாண்டி நின்றாலோ அல்லது சிக்னல் போட்ட பிறகும் வாகனங்களை இயக்கி சென்றாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து அபராத தொகையையும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: TN Weather Update: 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் விடுத்த அப்டேட்!

ஆகவே பொதுமக்கள் இனிவரும் காலங்களில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகச் சென்னை முழுவதும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி அந்தந்த காவல் ஆய்வாளர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் இன்று மனித பொம்மைகள் மூலம் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை முழுவதும் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. போக்குவரத்து போலீசார் அனைத்து முக்கியமான சாலை சந்திப்புகளிலும் சாலை தடை கோட்டை தாண்டக்கூடாது. சிக்னலில் போடப்பட்டுள்ள தடை கோட்டை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவே சாலை போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: "யார் ஆட்சியில் ஊழல் அதிகம்" - ஸ்டாலினுக்கு சவால் விடுத்த அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.