சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் தள்ளுவண்டி கடைகள் மூலம் காய்கறிகள், பழங்கள் மளிகை சாமான்களை விற்பனை செய்யும் திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா கூறுகையில், "மக்களின் வசதிக்காக காய்கறிகள், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. 850 ரூபாய், 1000 ரூபாய் ஆகிய மதிப்பில் தொகுப்புகள் விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் 10 நாள்களுக்கு வெளியே வரத்தேவை இல்லை. தற்போது 1 மணி வரை மட்டுமே வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.
மேலும், "சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிககளிடமிருந்து பெறும் விலைக்கு ஏற்ப பொருள்களை விற்பனை செய்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும் பொருள்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க....கேன்சர் மருந்து கிடைக்காமல் தவித்த தமிழ்நாட்டு நோயாளி; கைகொடுத்த கேரளா!