ETV Bharat / state

சென்னை - ஹூப்ளி செல்லும் விமானத்தில் திடீர் கோளாறு.. விமானிகள் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு! - Chennai airport update news

Chennai airport: சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறை விமானிகள் சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

chennai-to-hubballi-flight-pilot-identify-repair-2-hour-delay-new-flight-arranged-by-officers
சென்னை - ஹீப்ளி செல்லும் விமானத்தில் பழுது
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 5:27 PM IST

சென்னை: சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு 2 மணி நேரம் காத்திருந்து மாற்று விமானம் மூலம் ஹூப்ளி சென்ற பயணிகள். இன்று (செப்.6) சென்னையிலிருந்து ஹீப்ளி செல்ல 58 பயணிகளுடன் தயார் நிலையில் இருந்த போது விமானி விமானத்தில் பழுது இருப்பதை கண்டு பிடித்ததால் பெறும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதன் பின்பு 58 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு சென்னை உள்நாட்டு விமான ஓய்வறையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தனர் பின் மாற்று விமானத்தை ஏற்பாடு செய்த அதிகாரிகள் 58 பயணிகளையும் ஹீப்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் இருந்து கர்நாடகா மாநிலம் ஹூப்ளி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகி விமானத்தில் 58 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 64 பேர் பயணிக்க இருந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். இதையடுத்து விமானத்தின் கதவுகள் மூடப்பட்டன. இந்த நிலையில் விமானத்தை இயக்கும் முன்பு விமானத்தின் இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்த்த போது விமானத்தில் இயந்திர கோளாறுகள் ஏற்பட்டுள்ளததை விமான ஓட்டிகள் கண்டுபிடித்தார்.

இதையும் படிங்க: கோவை அருகே நாட்டு வெடியை கடித்த யானை பலி.. மரணிக்கும் முன் இரத்தம் சொட்ட வலம் வந்த வீடியோ வெளியீடு!

இதே நிலையில் விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பது புரிந்து கொண்ட விமானிகள் உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு விமானத்தில் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அதன் பின்பு விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பகல் 12 மணி வரை விமானத்தின் இயந்திரங்கள் சரி செய்யப்படவில்லை. இதனையடுத்து தற்போது மாற்று விமானம் ஏற்பாடு செய்து 58 பயணிகளையும் ஹூப்ளி அனுப்பி வைக்க விமான நிலைய அதிகாரிகள் முடிவு எடுத்தனர்.

இதையடுத்து சென்னையில் இருந்து ஹூப்ளி செல்ல வேண்டிய 58 பயணிகள் மாற்று விமானம் மூலம் இன்று (செப்.6) பகல் 12:20 மணிக்கு கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விமானிகள் விமானத்தில் பழுது இருப்பதை கண்டு பிடித்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: சேலம் அருகே நின்றிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து: 6 பேர் பலி; பதைபதைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.