இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்து குறிப்பில், "மியாவாக்கி எனும் அடர்ந்த நகர்புற காடுகளை உருவாக்கும் திட்டத்தில் அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கோட்டூர்புரத்தில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 23,800 சதுர அடி கொண்ட நிலத்தில் 20,724 சதுர அடியில் ரூ. 20 இலட்சம் மதிப்பீட்டில் 40 வகையான 2,000 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட கோட்டம் - 155ல் ராயலா நகர் 2 வது பிரதான சாலையில் 10,000 சதுர அடி கொண்ட நிலத்தில் 6,000 சதுர அடியில் ரூ.8.72 இலட்சம் மதிப்பீட்டில் 45 வகையான மரங்கள் 1 மீட்டர் இடைவெளி வீதம் 762 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
![மியாவாக்கி திட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-corporation-forest-script-image-7209208_08112020225737_0811f_1604856457_250.jpg)
இதன் தொடர்ச்சியாக சோழிங்கநல்லுார் மண்டலத்திற்குட்பட்ட வார்டு 197 மாதிரி பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 15,586 சதுர அடி கொண்ட நிலத்தில் 2,800 மரக்கன்றுகள் நடவுசெய்து மியாவாக்கி அடர் வனம் அமைக்கும் திட்டத்தை ஆணையாளர் பிரகாஷ் நேற்று (08.11.2020) தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
இந்த மியாவாக்கி அடர்வனங்களில் பாரம்பரிய மரவகைகளான ரோஜா, செம்பருத்தி, குண்டு மல்லி, முல்லை, பவளமல்லி, பலா மற்றும் தேக்கு போன்ற மரவகைகள் கொண்டு அடர் வனம் அமைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.