ETV Bharat / state

இயந்திரக்கோளாறு - சென்னை - துபாய் ஏர் இந்தியா விமானம் ரத்து... - Passengers Survived as Engine Trouble Was Discovered on Time

இயந்திரக்கோளாறு காரணமாக சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஏா் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.

சென்னை டூ துபாய் ஏர் இந்தியா விமானம் ரத்து

author img

By

Published : Jul 27, 2022, 11:01 AM IST

சென்னை: துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று இரவு 9:30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையத்திலிருந்து புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 169 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அவா்கள் அனைவரும் மாலை 6.30 மணிக்கெல்லாம் சென்னை விமானநிலையத்திற்கு வந்து, அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனா்.

விமானத்தின் தலைமை விமானி, பயணிகளை விமானத்தில் ஏற்றுவதற்கு முன்னதாக, விமானத்தின் இயந்திரங்களை சரி பார்த்தார். அப்போது விமான இயந்திரத்தில் பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை. பின்பு விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது, அவர்கள் வந்து விமான இயந்திரங்களை சரிபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நள்ளிரவு 11:30 மணி வரை விமானத்தை சரி செய்ய முடியவில்லை. எனவே மாலை 6.30 மணிக்கே வந்து காத்திருந்த பயணிகள், ஏா்இந்தியா அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் உடனடியாக விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. மேலும் விமானம் பழுது பாா்க்கப்பட்டு, இன்று புதன் கிழமை மாலை புறப்படும் என்று அறிவித்தனா்.

இதனால் பயணிகள் 169 பேர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எங்களை பல மணி நேரம் காத்திருக்க வைத்துவிட்டு, இப்போது ரத்து என்கிறீர்களே? இந்த நள்ளிரவில் நாங்கள் எங்கு செல்வோம்? என்று கேள்வி எழுப்பினர். அதன் பின்பு அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி அனைவருக்கும் விமானத்தில் வழங்க வேண்டிய உணவு, சிற்றுண்டி போன்றவைகளை வழங்கினர். அதோடு வெளியூர் பயணிகளை விமான நிறுவனமே ஹோட்டல்கள் ஏற்பாடு செய்து தங்க வைத்தனா். சென்னைக்கு அருகாமையில் உள்ள பயணிகளை வீடுகளுக்கு சென்று விட்டு, தகவல் கொடுத்த பின்பு வாருங்கள் என்று கூறி அனுப்பினர்.

இந்நிலையில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை தகுந்த நேரத்தில் விமானி கண்டுப்பிடித்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. அதைப்போல இந்த விமானம் ரத்து செய்யப்பட்டதால், துபாயிலிருந்து இன்று காலை சென்னை வர வேண்டிய ஏர் இந்தியா விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பழனி அருகே 30க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்ட பாஜகவினர் - பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.