தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 2018 செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு அதிகபட்ச சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயது வரை 8ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு இதுவரை 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதில் எம்.இ., எம்.டெக்., எம்பிஏ, படித்தவர்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் இந்த பதவிகளுக்கான நேர்காணல் , சான்றிதழ் சரிபார்க்க அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தலைமை செயலக சட்டப்பேரவை பெண் உறுப்பினர்கள் அறையில் நேர்காணலை செயலாளர் நிலையில் உள்ள அதிகாரி நடத்துகிறார். ஒரு நாளைக்கு 100 பேர் இதில் கலந்துகொண்டனர்.