ETV Bharat / state

நேரில் ஆஜராகாத கெளதம சிகாமணி; ஜன.24-ம் தேதிக்கு மீண்டும் வழக்கு ஒத்திவைப்பு! - court news in tamil

DMK MP Gouthama Sigamani Case: செம்மண் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக திமுக எம்.பி கெளதம சிகாமணி நேரில் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

திமுக எம்.பி கவுதம சிகாமணி மீதான வழக்கு
திமுக எம்.பி கவுதம சிகாமணி மீதான வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 1:21 PM IST

சென்னை: கடந்த 2006 - 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கு, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில், கடந்த 2023 ஜூலை மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை, ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கியில் நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், இந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக, அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக எம்.பியுமான கெளதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ்.பிஸ்னஸ் ஹவுஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நவம்பர் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு குற்றபத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு டிசம்பர் 22ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கௌதம சிகாமணி ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் அடுத்த மாதம் விசாரணையை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த வழக்கை நீண்ட நாட்கள் தள்ளிவைக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, ஜனவரி 4ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜன.4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திமுக எம்.பி கௌதம சிகாமணி ஆஜராகாத நிலையில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை ஜனவரி 24ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இதையும் படிங்க: அன்றாட உணவுப் பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை - சென்னை உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.