ETV Bharat / state

அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சிகிச்சை..! ஐசிஎஃப் ரயில்வே மருத்துவமனை சாதனை..! - Achievement in Government Hospital

Achievement in Railway Hospital: சென்னை, ஐ.சி.எஃப்-இல் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

chennai southern Railway Headquarters Hospital doctor achieved by made a heart treatment without surgery
அறுவை சிகிச்சை இல்லாமல் இதய சிகிச்சை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 12:07 PM IST

Updated : Nov 3, 2023, 4:36 PM IST

சென்னை: ஐ.சி.எப்-இல் உள்ள தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். சென்னையை அடுத்த பெரம்பூர் பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே மருத்துவமனையில் 67 வயதான பெண் இதய குழாய் (மிட்ரல் வால்வு) பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.

  • Landmark Medical Achievement at #SouthernRailway Headquarters Hospital in Perambur

    1st High-Risk, Non Surgical Mitral Valve Replacement procedure saves the precious life of a 67-year old patient

    First of it's kind in a Govt hospital & third such innovative procedure in India! pic.twitter.com/dW6Dkn350j

    — Southern Railway (@GMSRailway) November 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த பாதிப்பு அவருக்கு நீண்ட நாட்களாக இருப்பதாகவும், இதயத்தின் இடது ஆரிக்கள், மற்றும் இடது வென்டிரிக்கிளை இணைக்கும் வால்வான மிட்ரல் வால்வு என்பது பாதிக்கபட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வால்வு பாதிப்பு காரணமாக நீண்ட நட்களாக அவதி பட்ட நிலையில், தெற்கு ரயில்வே தலைமையக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருக்கு, மிட்ரல் வாழ்வு பாதிப்பு அதிகமாக இருப்பதால், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அரசு மருத்துவமனையில் முதன் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமல் பாதிக்கப்பட்ட மிட்ரல் வால்வை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அறுவை சிகிச்சையின்றி அவருக்கு இதய வால்வு ஆனது மாற்றியமைக்கப்பட்டது. இதனை இதயவியல் துறையின் கூடுதல் தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் எஸ்.செந்தில் குமார், தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் பி.வி.தனுஜா, கூடுதல் தலைமை சுகாதார இயக்குநர் டாக்டர் என்.எம்.குமார் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சை இந்தியாவில் மூன்றாவது முறையாகவும், அரசு மருத்துவமனையில் முதல் முறையாகவும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தெற்கு ரயில்வே மருத்துவமனை, இதய சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "கரோனா பாதித்தவர்களுக்கு எளிதில் மாரடைப்பு" - ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

Last Updated : Nov 3, 2023, 4:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.