ETV Bharat / state

ஷீலா தீட்சித் மறைவு: ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி இரங்கல்! - death

சென்னை: டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

mkstalin_ksalagiri
author img

By

Published : Jul 20, 2019, 9:54 PM IST

ஸ்டாலின், திமுக:

டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் எனும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர். மூன்று முறை டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த இவர் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர். காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ்:

இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி மாநகர முதலமைச்சருமான ஷீலா தீட்சித், தமது 81 ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்த செய்தி கேட்டு துயரமும், வருத்தமும் அடைந்தேன். மறைந்த மத்திய அமைச்சர் உமாசங்கர் தீட்சித் மருமகளான ஷீலா தீட்சித் நாடாளுமன்ற உறுப்பினராக, மத்திய அமைச்சராக, ஆளுநராக, தில்லி மாநில முதலமைச்சராக 15 ஆண்டு காலம் தொடர்ந்து பதவி வகித்து சாதனை படைத்தவர். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. மனிதநேயமிக்கவர். காங்கிரஸ் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன.

Intro:Body:டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலி இரங்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட ஷீலா தீட்சித், மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இணை அமைச்சராக பணியாற்றியவர். மூன்று முறை டெல்லி முதலமைச்சராக தொடர்ந்து பதவி வகித்த ஷீலா தீட்சித் நிர்வாகத் திறமை மிகுந்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.

டெல்லி வளர்ச்சிக்காகவும், அம்மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றிய அவர், கேரள மாநில ஆளுநராகவும் பணியாற்றினார். காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.