ETV Bharat / state

சென்னை மாணவன் முயற்சியால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் குறைபாடு மாற்றம் - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாணவன் முயற்சியால் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் குறைபாடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் குறைபாடு மாற்றம்

author img

By

Published : Sep 24, 2021, 8:07 AM IST

சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ரயில்வே செயல்பட்டு வருகிறது. ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதளம் இயங்கி வருகிறது. இந்த இணையதளம் அவ்வப்போது புதிதாக அப்டேட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திலிருந்த குறைபாட்டை சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த பா.ரங்கநாதன் (17) என்ற மாணவன் கண்டறிந்துள்ளார். இவர் சேலையூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்து வருகிறார்.

பள்ளி தரவுகள் திருட்டு

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் ரங்கநாதன் கூறியதாவது, "நான் இணையப் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறேன். கடந்த ஆண்டு எங்கள் பள்ளிக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேருவதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்திருந்தனர். அதனை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்து தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். இதனைப் பள்ளி நிர்வாகம் மூலம் அறிந்தேன். இது குறித்து ஆய்வு செய்த போது இணைய வழியிலிருந்து தரவுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைப் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்தேன், உடனே சரிசெய்யப்பட்டது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் குறைபாடு மாற்றம்

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஆர் புரோட்டோகால்ஸ் என்ற இணையத்தை உருவாக்கினேன். அதுமட்டுமில்லாமல் லிங்க்டு இன், லெனோவா போன்ற 25-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இணையதளத்திலிருந்த குறைபாட்டையும் கண்டறிந்து அவர்களுக்கு வழிமுறைகளை வழங்கியுள்ளேன். கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி எனது தனது தாத்தா, பாட்டியின் ரயில் பயணத்துக்காக ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தேன். அப்போது வலைத்தளம் இயங்கும் கோடிங் குறித்து தற்செயலாக ஆராய்ந்தேன். அதில், சில குறைபாடுகள் இருந்ததைக் கண்டுபிடித்தேன்.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் குறைபாடு

அதாவது முன்பதிவு செய்தவர்களின் பரிவர்த்தனை ஐடியை கோடிங் மூலம் எடுத்தேன். இதைக் கொண்டு முன்பதிவு செய்த நபர்களுக்குத் தெரியாமலேயே உணவு ஆர்டர் செய்ய முடியும். புறப்படும் இடத்தை மாற்றி அமைக்கலாம். டிக்கெட்டை ரத்து செய்யலாம். லட்சக்கணக்கான பயணிகளின் தரவுகளைத் தவறான வகையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. உடனே இந்தியக் கணினி அவசர நடவடிக்கை குழுவிற்கு இ-மெயில் அனுப்பினேன்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இ-மெயில் மூலமாக என்னை அவசர நடவடிக்கை குழுவினர் தொடர்பு கொண்டனர். அப்போது குறைபாட்டை விரைவாகச் சரிசெய்து விடுவோம் என்று உறுதியளித்தனர். கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்திலிருந்த குறைபாடு நீக்கப்பட்டது.

இதனை அறிந்த தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் என்னை நேரில் அழைத்துப் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். வருங்காலத்தில் மிகப்பெரிய உலகளாவிய மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநராக வருவதே எனது லட்சியம்" என்றார்.

இதையும் படிங்க: 'வேற்றுமையில் ஒற்றுமை' தென்னிந்தியா குறித்து வெங்கையா நாயுடு புகழாரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.