ETV Bharat / state

நரிக்குறவர் மக்களுக்கு தடை - ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் மீது வழக்கு - ரோகிணி தியேட்டர்

சென்னை ரோகிணி தியேட்டருக்கு நரிக்குறவர் சமூக மக்களை அனுமதிக்காத விவகாரம் தீண்டாமை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திரையரங்கு ஊழியர்கள் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 30, 2023, 12:04 PM IST

Updated : Mar 30, 2023, 8:05 PM IST

தியேட்டருக்குள் நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுப்பு

சென்னை: கோயம்பேடு பகுதியில் உள்ள பிரபல ரோஹிணி திரையரங்கில் இன்று வெளியான நடிகர் சிம்புவின் 'பத்து தல' திரைப்படம் பார்க்க நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த சிலர் தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தட்டிக்கேட்ட பிறகும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தீண்டாமை காரணமாக அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த வீடியோவில் முறையான டிக்கெட்டுடன் திரைப்படம் பார்ப்பதற்காக காத்திருந்த நரிக்குறவ பெண்மணி ஒருவருக்கு திரையரங்குக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை பொதுமக்களில் ஒருவர் ஏன் என விளக்கம் கேட்டதற்கு முறையாக பதில் அளிக்காத திரையரங்கு ஊழியர், அவர்களை விரட்டி விடுவதிலேயே கவனம் செலுத்தினார்.

பின்னர் நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி குழந்தைகளுடன் தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. டிவிட்டரில் சோனியா என்பவர் பதிவிட்டிருந்த வீடியோவை ரீட்வீட் செய்த இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தியேட்டர் நிர்வாகத்திற்குத் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், ரோகிணி தியேட்டர் நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில்,"பத்து தல திரைப்படம் U/A சென்சார் படம் என்பதால் சட்டப்படி 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது அதற்காகத் தான் அந்த சிறிய வயதுடைய குழந்தைகளுடன் இருந்த அந்த பெண்மணியை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை. ஆனாலும், பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்பதற்காக அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்து வருகின்றனர். என்று அதற்கான வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளது.

திரையரங்கு நிர்வாகத்தின் நூதன விளக்கத்தை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவிட்டிருந்த தருமபுரி எம்.பி.யான மருத்துவர் செந்தில் குமார், இதை இட்லினு சொன்னா, சட்னி கூட நம்பாது என பதிவிட்டிருந்தார்.

  • எங்க டிவிட்டர் ல ஒரு பழமொழி உண்டு.

    'இதை சட்னின்னு சொன்னா இட்லி கூட நம்பாது'. pic.twitter.com/exwarxFhxl

    — Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனிடையே, நரிக்குறவர் சமூக மக்களை தியேட்டருக்குள் அனுமதிக்காத விவகாரம் தொடர்பாக கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் திரையரங்கில் நேரில் விசாரணை மேற்கொண்டார். எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பாக திரையரங்க நிர்வாகத்திடம் நேரில் விளக்கம் கேட்க வந்துள்ளதாகவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகளும் திரையரங்கிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து ரோகினி திரையரங்கின் கேஷியர் ராமலிங்கம் மற்றும் ஊழியர் குமரேசன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் சட்டவிரோதமாக தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் கோயம்பேடு போலீசார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவுக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் நெடுங்கால தொடர்பு உள்ளது. எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களாக நரிக்குறவ இன மக்கள் எப்போதுமே இருந்துள்ளனர். இந்த அன்புக்கு நன்றி பாராட்டும் விதமாக ஒளி விளக்கு திரைப்படத்தில் முன்னாள் முதலமைச்சர்களான ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் நரிக்குறவர் வேடத்தில் ஆடிப்பாடியிருப்பார்கள்.

ஆனால் இன்றைய ஆடம்பர திரையரங்கு கலாச்சாரம் சாமானிய மக்களிடமிருந்து சினிமாவை வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்டதாக பொதுவான கருத்து உள்ளது. 25 பைசாவுக்கு டிக்கெட் வாங்கி திரையரங்கு சென்றவர்கள் தான் சினிமாவையும், நடிகர்களையும் வாழ வைத்தனர். இன்று சினிமாவை அவர்களுக்கு எட்டாக்கனியாக்குவதால், நடிகர்களும், சினிமாவும் சாமானியர்களிடமிருந்து எட்டாத தூரத்தில் போவதற்கு வழிவகுக்கும் என்பது சினிமா ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: இசை வெளியீட்டு விழாவில் ஷாக் கொடுத்த அமைச்சர் துரைமுருகன்.. சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் கூறியது என்ன?

Last Updated : Mar 30, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.