ETV Bharat / state

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - கனமழை

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 3:19 PM IST

சென்னை: தமிழ்நாட்டின் மழை விவரங்கள் குறித்து செய்திக்குறிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், "தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 1) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று ( மார்ச் 01) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 2ஆம் தேதி ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப்ரல் 3 முதல் 5ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), சூரலக்கோடு (கன்னியாகுமரி) தலா 2, பெரியார் (தேனி), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), ஹரூர் (தருமபுரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக கட்சி அலுவலக பொருட்களுக்கு உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.