ETV Bharat / state

சென்னை மழைப் பாதிப்பு - தகவல் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை - Corporation helpline Numbers Announcement

சென்னை: மழைப் பாதிப்புகள் குறித்து பொது மக்கள் தொடர்பு கொள்ள மாநகராட்சி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது.

chennai rainfall
chennai rainfall
author img

By

Published : Dec 1, 2019, 3:14 PM IST

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையின் தாக்கத்தால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னை மாநகரின் பெருமளவு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கத் தொடங்கியுள்ளது. சில வீடுகளில் மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சென்னையில் மழைப் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல்கள் கொடுக்க மாநகராட்சிக்கு தொடர்பு எண்களை அறிவித்துள்ளது.

மழைப்பாதிப்பு குறித்து, 044 - 25384520/530/540 என்கிற தொலைபேசி எண்களுக்கும், 9445477205 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மழை நீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து மாநகராட்சிக்கு பொதுமக்கள் தகவல்கள் கொடுக்கும் பட்சத்தில், ஏற்கெனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் மழை நீர் தேக்கத்தை அகற்றி, பொதுமக்களுக்கு உதவ மாநகராட்சி தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 01.12.19

சென்னையில் மழைநீர் தேங்கியுள்ளதா..? தகவல் தெரிவித்தால் உடனடியாக அகற்றப்படும்; மாநகராட்சி..

வடகிழக்கு பருவமழை தாக்கத்தால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும்
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கையை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழையை பொறுத்தவரை இரவு மற்றும் காலை நேரங்களில் அதிக அளவில் மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் சென்னை நகர் பகுதிகளில் பெருமளவு இடங்கள், சாலைகளில் மழை நீர் தேங்கத்தொடங்கியுள்ளது. மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் தொடர்பாக மாநகராட்சிக்கு பொதுமக்கள் தகவல்கள் கொடுக்கும் பட்சத்தில் ஆங்காங்கே ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் மழைநீர் தேக்கத்தை அகற்றி பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பில்லாமல் செய்வதற்கு மாநகராட்சி தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை வாசிகள் சென்னையில் தண்ணீர் தேங்குதல் தொடர்பான அனைத்து பிரச்னைகளுக்கும்,
044 - 25384520/530/540 என்கிற தொலைபேசி எண்களுக்கும்,
9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது..

tn_che_01_rain_water_removing_contact_numbers_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.