ETV Bharat / state

தமிழ்நாட்டில் கைதிகளின் விகிதம் மிகக் குறைவு - தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை

சென்னை: இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டு சிறைச்சாலைகளில் வசிக்கும் சிறைக் கைதிகளின் விழுக்காடு மிகக் குறைவு என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

author img

By

Published : Nov 10, 2019, 11:06 PM IST

puzhal prison

நாம் சாலையோரத்தில் நடந்து செல்லும்போது நம் கண்ணெதிரே ஒரு காவல்துறை அலுவலரையோ, காவல் நிலையத்தை பார்த்தாலோ தன்னை அறியாத பயம் கலந்த வெறுப்பு தோன்றும். ஏன் என்று தெரியாத வெறுப்பு, நமக்குள் ஆழமாய் சிந்திக்கத் தூண்டும்.

கைதியின் கடைசி நம்பிக்கை
கைதியின் கடைசி நம்பிக்கை

நாம் பல வண்ணங்களைக் கண்டு ரசித்திருக்கிறோம். ஆனால், காவல்துறையின் காக்கி வண்ணமும், காவல் நிலையத்தின் அடையாளத்தைக் குறிக்கும் சிகப்பு நிறமும் நமது வாழ்வில் சந்திக்க நினைக்காத பக்கங்களாக இருக்க வேண்டும் என்றுதான் ஒரு மனிதரின் லட்சியமாகப் பார்க்கப்படுகிறது. 'கைதி' என்றால் கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் என்று நினைத்து விடாதீர்கள்.

சிறை வாழ்க்கை
சிறை வாழ்க்கை

"கைதி" அந்த வார்த்தைக்குள் ஒருவரது வாழ்க்கை புதைந்து கிடக்கிறது. ஒற்றை மதில் சுவருக்குள் அடைக்கப்பட்ட ஏழு கம்பிகள், கம்பிகள் வழியே வானத்தை மட்டுமே ரசிக்கும் நிலை. இருட்டறைக்குள் வெளிச்சமாய் சுவரில்லாத சித்திரங்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் சிறைக் கைதிகள். சிறைக் கம்பிகளை கைகளால் இறுகப் பிடித்து முகங்களை மறைத்து வாழும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கம்பி தான் வாழ்வின் கடைசி நம்பிக்கையாக இருக்கிறது.

சிறைக்கைதிகளின் வாழ்க்கையின் எண்ணிக்கை

தங்களது பெயர்களை மறந்து வெள்ளை ஆடையில் கோடிட்டு காட்டப்படும் ஐந்து எண்கள்தான் அவர்களது அடையாளம். கறுப்பு அறைக்குள் ஒழிந்து கிடக்கும் கண்ணீருக்கு, அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகளே காரணம். சில நிரபராதிகள் சட்டத்திற்கு முன்பு குற்றவாளிகளாகவும் தண்டிக்கப்படும் கொடுமையும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சிறைக்கைதிகள் மனிதனோடு மனிதனாக சிரித்து பேசி, எந்தவித இணையத்தொடர்பும் இல்லாமல் வாழும் அகிம்சை புதுமையே. பல சிறைகளில் அவர்களுக்கு சில தொழில் முறை பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதனால் சிறைக் கைதியை மக்கள் பார்க்கும் பார்வை மாறுபடும்.

மக்களைப் படிக்க நினைக்கும் ஒருவர் ஒருமுறையாவது சிறைக்கைதியின் வாழ்க்கையைப் படித்து பார்க்க வேண்டும். தோய்ந்து போன வாழ்க்கை, இளமையோடு செல்பவன் முதுமையோடு வெளியே வருகிறான். சிறைக்கைதியின் கறுப்பு தாடிக்கும், நரைத்த தாடிக்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்வதே புதிது தான். சிறை அடையாளத்தை மறந்து கடைசி கேட்டை தாண்டி வெளியில் தனது காலடியை வைக்கும் அந்த நேரம் சிறகை விரித்து வானில் பறக்க நினைக்கும் அதிசய பிறவி போல்தான் இருக்கும் அவர்களது வாழ்க்கை.

அந்த வகையில், இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் இருப்பு விகிதம் மிகக் குறைவாக உள்ளதென தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இதற்கான காரணம் என்ன? விவரங்களுடன் இந்த செய்தி தொகுப்பில் காணலாம். இந்த முழுத்தொகுப்பையும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துக்காக உயர்நீதிமன்ற வழக்கறிஞகர் புகழேந்தி விரிவாக விளக்கியுள்ளார்.

2017ஆம் ஆண்டிற்கு முன்பு வரை நாடு முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான தகவல்களையும், அதற்காக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கிய முழு அறிக்கை ஒன்றை தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் கடந்த வாரம் வெளியிட்டது. அதனடிப்படையில் இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் விகிதம் மிகக் குறைவாக உள்ளது என தெரிய வந்துள்ளது.

அதாவது இந்தியா முழுவதும் உள்ள ஆயிரத்து 400 சிறைகளில் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை நான்கு லட்சத்து 33 ஆயிரம் பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் உத்தரப் பிரதேசம் மாநில சிறைச்சாலைகளில் 165 விழுக்காடும், சட்டீஸ்கர் மாநிலத்தில் 157.2 விழுக்காடு பேரும் அடைக்கப்பட்டுள்ளனர்

இந்த வரிசையில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகள் உட்பட 138 சிறைச்சாலைகள் கொண்ட மாநிலமான தமிழ்நாட்டில் 61.3 விழுக்காடு கைதிகள் மட்டுமே அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

குறிப்பாக அண்ணா பிறந்தநாள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு போன்ற அரசு விழாக்களின் மூலம் நூற்றுக்கணக்கான ஆயுள் தண்டனைக் கைதிகள் கருணை அடிப்படையில் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி 22 ஆயிரத்து 792 கைதிகளை அடைக்கும் வசதியுள்ள தமிழ்நாடு சிறைச்சாலைகளில் 601 பெண் கைதிகள், 112 அயல்நாட்டு குற்றவாளிகள் உட்பட வெறும் 13 ஆயிரத்து 969 கைதிகளே அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 56.9 விழுக்காடு விசாரணை கைதிகள் என்ற தகவல் மேலும் அதிர்ச்சியூட்டுவதாகவே உள்ளது.

சிறைச்சாலையின் நிலை இப்படியிருக்க ஒரு சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியைக் கொண்ட கேரளாவில் 74.44 விழுக்காடு சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், 12 சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளைக் கொண்ட தமிழ்நாட்டில் 36.99 விழுக்காடு சிறார்களே அடைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் குற்றச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவது ஒரு புறமிருக்க சிறைச்சாலை மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளின் அதிக எண்ணிக்கையே இந்த குறைவான விகிதத்திற்கு காரணமாக உள்ளது என சான்றுகள் தெரிவிக்கின்றன.

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை குறித்து முன்னாள் சிறைத்துறை அலுவலர்கள் கூறுகையில்,

"தண்ணீர்ப் பற்றாக்குறை, மின் தடை போன்ற குடிமைப் பிரச்னைகளுக்காக மக்கள் பல போராட்டங்களை நடத்துபவர்கள் காவல்துறையினரால் கலைக்கப்படுகிறார்கள். இதனிடையே, அவர்களது போராட்டங்கள் தீவிரமடைந்து காவல் துறைக்கு ஒத்துழைப்பு அளிக்காத நிலை உருவாகும் வரை கைது நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதன்படி அவர்கள் கைது செய்யப்பட்டாலும், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்காத பட்சத்தில் போராட்டக்காரர்கள் சட்டப்படி அன்று மாலைக்குள் விடுவிக்கப்படுவது வாடிக்கையான ஒன்று. குறிப்பாக மனித உரிமைகள் குறித்தும், சட்டத்தில் உள்ள ஓட்டைகளை வைத்து வழக்கறிஞர்களை அணுகும் முறை குறித்தும் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வே சிறையில் அடைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணை வாங்கி வெளியே வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பொருளாதார பிரச்னைகள் காரணமாக நூற்றில் பத்து வழக்குகளில் தண்டனைக் காலம் முடிந்தும் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்டமுடியாமல் அதற்கும் சேர்த்து சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகள் ஒருபுறமிருக்க அதே பொருளாதாரப் பிரச்சனைகளை மனதில் வைத்து வெளியில் சென்றால் என்ன செய்வோம் என்ற கேள்வியுடனேயே சிறையில் தங்கிவிடும் கைதிகளும் உண்டு" என தெரிவிக்கின்றனர்.

Intro:

Body:சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி பேட்டி

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.