ETV Bharat / state

'லோன் செயலிகளில் கடன் பெறாதீர்' - சென்னை காவல் துறை

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் வழங்கும் செயலிகள் (Loan App) மூலம் கடன் பெற வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'லோன் செயலிகளில் கடன் பெறாதீர்' - சென்னை காவல்துறை

author img

By

Published : Feb 12, 2022, 11:39 AM IST

சென்னை: 2021ஆம் ஆண்டு ஜனவரியில் கடன் வழங்கும் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின்னர் தொந்தரவு செய்யும் மோசடி கும்பலை கைது செய்து சென்னை காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

தொடர்ந்து, பொதுமக்களை மிரட்டும் லோன் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கவும் காவல் துறையினரால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது, இத்தகைய கடன் செயலிகள் மீண்டும் பிளே ஸ்டோரில் பரவலாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

இவற்றில் கடன் வாங்கும் நபரின் செல்போனில் பதிவாகியுள்ள எண்கள், புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்கள் உள்ளிட்டவற்றை சம்பந்தப்பட்ட செயலிகள் சேகரித்து வைத்துக் கொள்ளும். கடனாக தரப்படும் தொகையிலும், ஏறக்குறைய 30 விழுக்காடு பணம் செயல்பாடு கட்டணமாக பிடித்துக் கொள்ளப்படும்.

மீதமுள்ள பணமே கடனாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். பணத்தை திருப்பி செலுத்த ஏழு நாட்கள் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். தவறும்பட்சத்தில், நாள் ஒன்றுக்கு 200 முதல் 500 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். பணத்தை திருப்பி செலுத்தாதவர்களுக்கு செல்போன் அழைப்புகள் மூலம் மிரட்டல்கள் வரத் தொடங்கும்.

அத்துடன் கடனாளர் குறித்து அவரது நண்பர்கள், உறவினர்களின் செல்போன் எண்களுக்கு தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்பும். இதனால், கடனாளர்களின் வேலையிடங்கள், உறவினர்கள் முன்னிலையில் அவமானத்திற்கு உள்ளாக நேரிடுகிறது.

இதில், மன உளைச்சலின் காரணமாக தற்கொலை முயற்சிகளும் அரங்கேறுகின்றன. ஆகையால், பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ லோன் செயலிகளில் கடன் பெற வேண்டாம் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: கையும் களவுமாகப் பிடிபட்ட தொடர் பைக் திருடர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.