ETV Bharat / state

வாகனத்தில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கஞ்சா கடத்தல்; நாடகமாடி பிடித்த போலீசார் - ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை

வண்டியின் டேஷ்போர்டில் ரகசிய அறையில் மறைத்து 50 கிலோ கஞ்சா கடத்தி வந்த தெலங்கானா கும்பல் கடத்தி வந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சென்னை போலீசார், கஞ்சா வியாபாரிகள் போல நடித்து தெலங்கானா கும்பலை பிடித்தனர்.

வாகனத்தில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கஞ்சா கடத்தல்; நாடகமாடி சுற்றி வளைத்த சென்னை போலீசார்

author img

By

Published : Jan 25, 2023, 10:46 PM IST

வாகனத்தில் ரகசிய அறை அமைத்து நூதன முறையில் கஞ்சா கடத்தல்; நாடகமாடி சுற்றி வளைத்த சென்னை போலீசார்

சென்னை: ஆப்ரேஷன் கஞ்சா வேட்டை மூலமாக கஞ்சாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தமிழக காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒவ்வொரு முறையும் புது நடவடிக்கையைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனையை முடக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கம், சொத்துக்கள் முடக்கம் ஆகியவற்றை அதிரடியாக செய்தது. இருப்பினும் கஞ்சா எங்கிருந்து வருகிறது என்ற மூல இடத்தை கண்டுபிடித்து தடுத்து நிறுத்துவதற்கான தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா பயன்படுத்துபவரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இருப்பினும், ஒவ்வொரு முறை அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலம் விற்பவர்களை கைது செய்யச்செல்லும்போதும், அப்பகுதியில் உள்ள சிறுவர்களை உளவு பார்க்க வைத்து, கஞ்சா விற்பனை செய்பவர்கள் தொடர்ந்து தப்பித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணை விதத்தை மாற்றி போலீசார் கஞ்சா கடத்துபவர்களை கைது செய்ய களம் இறங்கினர். அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா பயன்படுத்துபவர்களிடம் நட்பாகப் பேசி, எங்கிருந்து கஞ்சா கிடைக்கிறது என்ற தகவல்களை போலீசார் சேகரித்து வந்துள்ளனர். அதன் மூலமாக கஞ்சா மொத்தமாக எங்கே கிடைக்கிறது என்று தரகர்கள் மூலம் விசாரணை மேற்கொண்டதில் தெலங்கானா, ஆந்திரா பகுதிகளில் இருந்து சரக்கு வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தப்பட்டு வருவதைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து கடத்தல்காரர்கள் போல் நாடகமாடி, தரகர்கள் மூலம் கஞ்சா மொத்த விற்பனையாளர்களை அணுகி, 50 கிலோ கஞ்சாவை ஆர்டர் செய்துள்ளனர். கடத்தல்காரர்களை நம்ப வைப்பதற்காக கட்டுக்கட்டாக பணத்தை கையில் வைத்திருப்பது போல காட்டி கடத்தல்காரர்களை நம்ப வைத்தனர். அதன்பின் கஞ்சாவை சரக்கு வாகனம் ஒன்றில் கடத்தி வருவதாக கூறி, அதன் எண்ணை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு தனிப்படை போலீசார் காத்திருந்தனர்.

கஞ்சா கொண்டுவரும் வாகனம், கஞ்சா வாங்குபவர்கள் போல் இருந்த போலீசாரை நெருங்கும் போது, கஞ்சா கடத்தல்காரர்கள் உஷாராகி உள்ளனர். தாங்கள் எந்தவித கஞ்சாவையும் கடத்தவில்லை என போலீசாரிடம் விசாரணையில் தெரிவித்தனர். தவறான வாகனத்தைப் பிடித்து விட்டோமோ என்ற அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தி வந்த நிலையில் வாகனத்தின் ஓட்டுநர் அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள டேஷ்போர்டு பொருத்தப்பட்டுள்ள நட்டு போல்ட் ஆகியவை புதுசாக இருந்தது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் அந்த டேஷ்போர்டை தட்டிப்பார்க்கும் போது வேறு விதமான சத்தம் கேட்டதால், போலீசார் சந்தேகம் வலுவடைந்து டேஷ்போர்டை திறந்து பார்த்த போது, அங்கு சுமார் 20 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சாவை ரகசிய அறை போல உருவாக்கி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். காலியாக வந்த சரக்கு வாகனம் என்பதால் தெலங்கானாவில் இருந்து தமிழக எல்லை வழியாக சென்னைக்குள் வரும்போது பல சோதனை சாவடிகளில் காவலர்களுக்கு மண் தூவி கடத்தி, வந்த கடத்தல்காரர்களின் யுக்தி போலீசாருக்கு தெரிந்தது.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 50 கிலோ கஞ்சாவையும், கடத்தல்காரர்கள் மூவரையும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கொண்டா ரெட்டி, அணில் குமார் மற்றும் உப்பிலிபட்டி அஞ்சு ஆகியோர் என தெரிய வந்தது.

குறிப்பாக இவர்கள் மற்ற மாநிலங்களில் கஞ்சாவை டெலிவரி செய்வதை தொழிலாக வைத்துள்ளார்கள். இந்த 50 கிலோ கஞ்சா கர்நாடக மாநிலத்திற்கு கொண்டு செல்ல இருந்ததாகவும், அந்த இடத்தில் வியாபாரிகள் வாங்க மறுத்ததால் சென்னை கொண்டு வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

கஞ்சா பொட்டலத்தை பயன்படுத்தும் நபர்களிடமிருந்து நூல் பிடித்து தொடர் விசாரணை மேற்கொண்டு மொத்த கஞ்சா விற்பனையாளர்களிடம் கடத்தல்காரர்கள் போல் நாடகமாடி போலீசார் சாதுரியமாக கடத்தல்காரர்களை கைது செய்தனர். இப்பணிக்கு உறுதுணையாக செயல்பட்ட உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

இதையும் படிங்க: 'வாழ்க தமிழ்நாடு..வளர்க பாரதம்' தமிழில் கூறி உரையை முடித்த ஆளுநர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.