ETV Bharat / state

சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிராக சிறப்பு சோதனை - 4 பேர் கைது, 11 பிடியாணைகள் நிறைவேற்றம்!

சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான ஒரு நாள் சிறப்பு சோதனையில், 722 குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, அதில் 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். 11 நீதிமன்ற பிடியாணைகளையும் போலீசார் நிறைவேற்றினர்.

dare opreation
சரித்திர பதிவேடு
author img

By

Published : Jul 17, 2023, 7:10 PM IST

சென்னை: சென்னையில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், பல வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி குற்றவாளிகள் தொடர்பாக காவல்துறையினர் அவ்வப்போது சிறப்பு தணிக்கைகள் மேற்கொண்டு குற்றவாளிகளை கண்காணித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், நேற்று(ஜூலை 16) சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் வெட்டுக்காயம் ஏற்படுத்தும் குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் இந்த சிறப்பு தணிக்கையை மேற்கொண்டனர். அதில், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான சோதனையில் 722 குற்றவாளிகளிடம் நேரில் சென்று விசாரித்தும், அவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே 625 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய சிறப்பு சோதனையில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல், நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த ஒரு குற்றவாளியின் இருப்பிடத்தை அறிந்து கைது செய்துள்ளனர். மேலும், கடந்த இரண்டு மாதங்களில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள நீதிமன்ற பிடியாணைகளில் 11 குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோல், திருநங்கைகளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் காவல் குழுவினர் சென்னையிலுள்ள 136 முக்கிய சந்திப்புகள் மற்றும் சிக்னல்களில் கண்காணித்து, அங்கு பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டிருந்த 78 திருநங்கைகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில், சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி நபர்கள் மீதான ஒரு நாள் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு தணிக்கையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மற்றும் போக்கிரி நபர்கள் என 417 குற்றவாளிகள் தணிக்கை செய்யப்பட்டு அதில், 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல், 33 குற்றவாளிகள் செயல்துறை நடுவர்களாகிய சம்பந்தப்பட்ட துணை ஆணையாளர்களிடம் திருந்தி வாழ்வதற்காக நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதிக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: 'நான் மந்திரிச்சு தந்தா நல்ல வசூல் ஆகும்' எனக் கூறி 3 1/2 சவரன் தங்கச் சங்கிலி அபேஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.