ETV Bharat / state

மோசடியில் இழந்த ரூ.95 கோடி; உரியவரிடம் ஒப்படைத்ததாக சென்னை காவல்துறை தகவல் - சென்னை காவல்துறை

2022ஆம் ஆண்டில் மோசடிகளில் சிக்கி இழந்த 95.85 கோடி ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்துள்ளதாக சென்னை காவல் துறை அளித்த புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

மோசடியில் இழந்த ரூ.95 கோடி; உரியவரிடம் ஒப்படைத்ததாக சென்னை காவல்துறை தகவல்

author img

By

Published : Jan 25, 2023, 10:34 PM IST

சென்னையில் பெரிய அளவில் நடைபெறும் ஆன்லைன் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, வங்கி மோசடி, ஆவண மோசடி, கந்துவட்டி மோசடி, நில அபகரிப்பு மோசடி, மரபுசார் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க மத்திய குற்றப்பிரிவில் தனித்தனி பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. பெரிய அளவிலான மோசடிகளை தடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 2022ஆம் ஆண்டு பொதுமக்கள் மோசடிகளில் சிக்கி இழந்த 95 கோடியே 85 லட்சத்து 49 ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீட்டுக்கொடுத்துள்ளதாக சென்னை காவல்துறை புள்ளி விவரங்களில் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவில் பெறப்பட்ட புகார்களில் 517 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள 1058 வழக்குகளில் விசாரணை முடிக்கப்பட்டதாகவும், அதில் 565 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு 478 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2022ஆம் ஆண்டு 39 வழக்குகள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதில் 2022ஆம் ஆண்டு ஆன்லைன் மோசடிகளில் ஈடுபட்ட 30 பேரை வெளி மாநிலங்களில் வைத்து கைது செய்ததாகவும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 71 பேரை குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மேலும் 97 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலமாக தண்டனை வாங்கி கொடுத்துள்ளதுடன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள 216 குற்றவாளிகளுக்குஎதிராக பிடியாணைகள் வழங்கப்பட்டு, 65 தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவில் கடந்த ஆண்டு 7056 மனுக்கள் பெறப்பட்டு, 6591 மனுக்கள் மீது விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறை, மத்திய குற்றப்பிரிவில் கடந்தாண்டு பொதுமக்கள் மோசடிகளில் சிக்கி இழந்த 95 கோடியே 85 லட்சத்து 49ஆயிரத்து 715 ரூபாயை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீட்டு கொடுத்திருப்பதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டு மீட்கப்பட்ட தொகை 154.4 கோடி ரூபாய். அதாவது 2021ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2022ஆம் ஆண்டு மீட்கப்பட்ட தொகை குறைவாக உள்ளது.

குறிப்பாக 2022ஆம் ஆண்டு மட்டும் நிலமோசடி வழக்குகளில் 81 கோடியே 98 லட்ச ரூபாய் அசையா சொத்துக்கள் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ஆன்லைன் லோன் ஆப் மோசடி உருவெடுத்து வரும் நிலையில், கடந்தாண்டு மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கொண்ட ஜம்தாரா கும்பலை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து 50-க்கும் மேற்பட்ட செயலியை முடக்கியது.

கிரிப்டோகரன்சி மோசடி, கடன் செயலி மோசடி, ஸ்கிம்மர் மோசடி, தொலை தூர செயலி மூலம் மோசடி உள்ளிட்ட பல வழக்குகளின் பட்டியல் வடிவமைக்கப்பட்டு நிலையாணை அளிக்கப்பட்டுள்ளது. கணினி வழி குற்றங்களை தடுத்திட ’முத்துவும் 30 திருடர்களும்’ என்ற கையேடு வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனியாக இருந்த சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. மதுரையில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.