ETV Bharat / state

போலி செயலிகள் மூலம் பணம் சுருட்டிய நபர்கள்: குற்றப்பிரிவு காவல் துறையினர் கிடுக்கிப்பிடி!

போலி செயலிகள் மூலம் தங்களிடம் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசைக்காட்டி மோசடியில் ஈடுபட்ட கும்பல்கள் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

loan
போலி செயலி
author img

By

Published : Jun 13, 2021, 2:45 PM IST

சென்னை: லோன் வழங்குவதாகக் கூறி பல்வேறு போலி செயலிகளை உருவாக்கி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுவந்த சீன நாட்டைச் சேர்ந்தவர்களை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறைந்த முதலீடு, அதிக லாபம்

குறைந்த முதலீடு செலுத்தினால் அதிக லாபம் பெற முடியும் எனக் கூறி சில செயல்களின் மூலம் பல கும்பல்கள் பண மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், சமீபகாலமாக சென்னையில் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்ட முடியும் எனக்கூறி power bank, telsa power bank உள்ளிட்ட செயலிகள் மூலம் விளம்பரப்படுத்தி மக்களின் கவனத்தை இந்த கும்பல்கள் ஈர்த்து வருகின்றன.

ccb
போலி செயலிகளுக்கு சென்னை காவல் துறை கிடிக்குப்பிடி

போலி லோன் செயலி

ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஏற்றார் போல் ஒரு சிறிய அளவு தொகையை திரும்பச் செலுத்தி மக்களிடம் நம்பிக்கை பெறும் வகையில் இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, முதலீடு செய்யும் தொகையானது வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படாமல் Google pay, paytm உள்ளிட்ட ஆன்லைன் கட்டண செயலிகளுக்கு அனுப்புமாறும் தெரிவிக்கின்றனர்.

இந்த வகை செயலிகளை செல்போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் நபரின் தகவல்களை இவர்கள் திருடிக் கொள்கின்றனர்.

powerbank
போலி லோன் செயலி

power bank செயலி மீது புகார்

இந்த வகையில், 34க்கும் மேற்பட்டவர்கள் power bank செயலி மூலம் ஏமாற்றப்பட்டடதாக சென்னை மத்தியக் குற்றப் பிரிவினருக்கு புகார்கள் வந்துள்ளன.

அதுமட்டுமின்றி telsa power bank செயலி மூலமாகவும் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டதாகக் கூறி மூன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் புகார்கள் அளித்துள்ளனர்.

இந்தப் புகார்களின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த மோசடி கும்பலையும் மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அங்கீகாரம் பெற்ற வங்கிகளில் மட்டுமே முதலீடு மற்றும் லோன் பெறுதல் போன்றவற்றில் மக்கள் ஈடுபட வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத இதுபோன்ற போலி செயலிகள் மூலம் மோசடியில் ஈடுபடும் கும்பல்களை நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ. 100-க்கு 500 அள்ளித் தந்த ஏடிஎம் - கமுக்கமாக பணமெடுத்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.