சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்து, சென்னை காவல் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்கு 18,000 காவல் அதிகாரிகள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
-
#HappyNewYear2024
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
18,000 Police on duty.
1,500 Home Guards in service.
420 Vehicle check teams.
25 Road Safety Patrol Teams
🪧 100 major temples, churches and places of worship are covered.
🪧 All Terrain Vehicles (ATV) pressed into service.
🪧 Police Assistance… pic.twitter.com/EoV6U0yfmI
">#HappyNewYear2024
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 30, 2023
18,000 Police on duty.
1,500 Home Guards in service.
420 Vehicle check teams.
25 Road Safety Patrol Teams
🪧 100 major temples, churches and places of worship are covered.
🪧 All Terrain Vehicles (ATV) pressed into service.
🪧 Police Assistance… pic.twitter.com/EoV6U0yfmI#HappyNewYear2024
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) December 30, 2023
18,000 Police on duty.
1,500 Home Guards in service.
420 Vehicle check teams.
25 Road Safety Patrol Teams
🪧 100 major temples, churches and places of worship are covered.
🪧 All Terrain Vehicles (ATV) pressed into service.
🪧 Police Assistance… pic.twitter.com/EoV6U0yfmI
முக்கியமாக, புத்தாண்டு கொண்டாட்டத்தின் பொருட்டு கடற்கரை, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை (TSP) காவல் ஆளிநர்கள் என மொத்தம் 18,000 காவல் துறையினர் மூலம், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாதுகாப்பு அளிக்க சென்னை பெருநகர காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது.
காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும், புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தியாகராயநகர், அடையாறு, புனித தோமையர்மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, அண்ணா நகர், கொளத்தூர் மற்றும் கோயம்பேடு ஆகிய இடங்களில் மொத்தம் 420 இடங்களில் வாகனத் தணிக்கை குழுக்களும், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் தமிழ்நாடு காவல்துறை, கடலோர பாதுகாப்பு குழுமம், மெரினா கடற்கரை உயிர்காக்கும் பிரிவினருடன் இணைந்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையும், எச்சரிக்கைப் பதாகைகளும் பொருத்தப்பட்டு, கடலில் மூழ்கி உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து சென்று, பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேண்டிய உதவிகளை மேற்கொள்வார்கள். தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல், பைபாஸ் சாலை, மற்றும் GST ரோடு போன்ற பகுதிகளில் இருசக்கர வாகன பந்தயம் (Bike Race) தடுப்பு நடவடிக்கையாக, 25 கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் தெரிவித்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதற்கும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை (டிச.31) மாலை முதல் நாளை மறுநாள் (ஜன.1) வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள் மற்றும் ATV (All Terrain Vehicle) எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும்.
மேலும், அவசர மருத்துவ உதவிக்கு, முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவக் குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.
மேலும், Mobile Surveillance Team எனப்படும் குழுக்கள் அமைக்கப்பட்டு, Tata Ace போன்ற வாகனங்களில் PA.System, Flickering Light போன்றவை பொருத்தியும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனம் அதிகம் சேரும் இடங்களில் உபயோகிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 1,500 பேருக்கு வெள்ள நிவாரணம் வழங்கிய நடிகர் விஜய்.. தூத்துக்குடியில் உயிரிழந்தவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி!