சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று ஒரே நாளில் நான்கு காவலர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் இருவருக்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்று உள்ளதாகவும் மேலும் இருவருக்கு தொற்று இருப்பதாக தவறான பரிசோதனை முடிகள் வந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து காவல் துறை அலுவலர்கள் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.
தற்போது தொற்று இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அது தவறுதலாக அறிவிக்கப்பட்டுவிட்டது என கூறுவது பிசிஆர் பரிசோதனை மீது சந்தேகத்தை எழுப்புகிறது. தொற்று இல்லை என அறிவிக்கப்பட்ட இரண்டு காவலர்கள் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் கரோனா தீவிரம்