தென் சென்னை போக்குவரத்து காவல் துறை சார்பில் கரோனோ விழிப்புணர்வு நாடகம், இருசக்கர வாகன பேரணி பரங்கிமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
இதற்கு காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமை தாங்கினார். கரோனா விழிப்புணர்வுப் பேரணியை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் கொடி அசைத்துத் தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, "கரோனா இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதைத் தடுக்கத் தேவையான முயற்சிகளைச் செய்துவருகிறோம். கரோனா விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது.
கடந்த 15 நாள்களாக சந்தை, கடைகளுக்கு வரும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துவருவதைக் காண முடிகிறது. பாதுகாப்புடன் இருந்தால் கரோனா பாதிப்பு அதிகமாக இருக்காது.
காவலர்களும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும். கிருமிநாசினி, சோப்பு கொண்டு அடிக்கடி கைகளைச் சுத்தம்செய்ய வேண்டும்.
காவலர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவரது தொடர்பில் இருந்தவர்களும் கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
குறைந்தது மூன்று மாத காலம் இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை நாம் தொடர்ந்து பின்பற்றியே தீர வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்: சென்னை காவல் ஆணையர்