ETV Bharat / state

பாடி மேம்பாலத்தில் காற்றில் கறைந்த சமூக இடைவெளி! - பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்: சமூக இடைவெளி இல்லாத அவலம்

சென்னை: பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சமூக இடைவெளி இன்றி கரோனா வைரஸ் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்
author img

By

Published : Apr 1, 2020, 3:51 PM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுமக்கள் ஆரம்பத்தில் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டிலேயே முடங்கியிருந்தனர். ஆனால், கடந்த இரு தினங்களாக ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வெளியே உலாவி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை பாடி மேம்பாலத்தின் நான்கு புறங்களிலிருந்தும் வாகனங்கள் சாரை சாரையாக வந்தன. இருந்த போதிலும், இப்பகுதியில் வில்லிவாக்கம், திருமங்கலம், கொரட்டூர், ராஜமங்கலம் ஆகிய காவல் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதையும் மீறி பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர். இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களை வழி மடக்கி எதற்காக, எங்கு செல்கிறீர்கள் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வாகன நெரிசலில் சிக்கி தவித்தனர். இதனால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பல இருசக்கர வாகன ஓட்டிகள் முகக் கவசம், கையுறை ஆகியவற்றை அணியாமல் வாகனங்களில் வருகின்றனர். இதனால் சோதனையில் ஈடுபடும் காவல் துறையினருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

பாடி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

அத்தியாவசிய பணிகளைத் தவிர, ஊரடங்கு உத்தரவை மீறி ஊர் சுற்ற வரும் வாகனங்களில் வரும் பொதுமக்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், கரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்க முடியாமல் அனைவரும் பாதிக்கப்பட வேண்டிய அவலம் ஏற்படும் எனவும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க...நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற புனேயைச் சேர்ந்த 60 பேர் தனிமைப்படுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.