ETV Bharat / state

சென்னை- மஸ்கட் செல்லும் விமானம் 18 மணி நேரம் தாமதம்

author img

By

Published : Sep 26, 2021, 7:59 PM IST

சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் விமானம் இயந்திரக் கோளாறு காரணமாக 18 மணி நேர தாமதத்திற்கு பிறகு 156 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

சென்னை- மஸ்கட்
சென்னை- மஸ்கட்

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஓமன் நாட்டு தலைநகா் மஸ்கட்டிற்கு நேற்று (செப்.25) மாலை விமானம் ஒன்று புறப்பட இருந்தது. ஆனால், மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு இருப்பதால், சரிசெய்த பின் இரவு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதையெடுத்து விமானத்தில் பயணம் செய்ய சோதனைகளை முடித்துக் கொண்ட 156 பயணிகள் ஓய்வுக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

விமானம் 18 நேரம் தாமதம்
விமானம் 18 நேரம் தாமதம்

ஆனால் இரவு 9 மணிக்கு வரை விமானம் புறப்பட்டு செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் ஆத்திரமடைந்த பயணிகள், விமான நிறுவன கவுண்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். 10 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம், உடனே விமானம் புறப்பட்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டனர்.

பயணிகளை காவல்துறையினரும், பாதுகாப்பு அலுவலர்களும் சமாதானப்படுத்தினர். பின்னர் விமான நிலையத்தில் காத்திருந்த 156 பயணிகள் சென்னையில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து இயந்திர கோளாறு ஏற்பட்ட விமானத்தில் பழுது சரி செய்யும் பணியில் பொறியாளா்கள் ஈடுப்பட்டனா்.

ஆனால் உரிய உதிரி பாகங்கள் இல்லாததால், மஸ்கட்டில் இருந்து இன்று (செப்.26) காலை வந்த விமானத்தில் உதிரி பாகங்கள் சென்னை வந்தன. உதிரி பாகங்களை கொண்டு பொறியாளா்கள் பழுதை சரி செய்தனர். இதையடுத்து ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 156 பயணிகளும் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு மஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.