சென்னை திருவல்லிக்கேணி எம்.ஏ சாகிப் தெருவைச் சேர்ந்தவர்கள் நாகராஜ்(48), வீரபத்திரன்(39). இவர்கள் இருவருக்கிடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்துள்ளது. ஜுன் மாதம் 15ஆம் தேதி நாகராஜ், வீரபத்திரனின் மனைவியை தகாத வார்த்தியில் திட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீரபத்திரன், நாகராஜை கத்திரிக்கோலால் வெட்டியுள்ளார். இதையடுத்து வீரபத்திரனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஜூலை 14 வீரபத்திரன் சிறையிலிருந்து ஜாமீனில் வந்து தனது நண்பர் ரவியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜ் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ஆகியோர் வீரபத்திரன், ரவியை தாக்கியுள்ளனர்.
ரவியின் தந்தை ரமேஷ் அப்பகுதியில் அதிமுக இணை செயலாளராக உள்ளார். பின்னர் தனது மகனை தாக்கிய நாகராஜ் அவரது நண்பர் ஸ்ரீகாந்த் ஆகியோரை பழிவாங்க திட்டமிட்டார். இந்நிலையில் அவரது கையில் ஸ்ரீகாந்த் மட்டும் கிடைத்துவிட இரும்பு கம்பியால் அடித்து கொலைசெய்துவிட்டார்.
தற்போது அதிமுக இணை செயலாளர் ரமேஷ் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: காய்கறி வியாபாரி கொலை வழக்கு: மனைவி, மகனிடம் காவல் துறை விசாரணை!