சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) இயக்குநராக பணியாற்றி வந்த கணேசன் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாங்கித் தருவதாக் கூறி 1.62 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பின்னர் எழும்பூர் நீதித்துறை நடுவர் முன் முன்னிறுத்தப்பட்ட அவரை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் (SETC) மேலாண் இயக்குநராக தற்பொழுது பணியாற்றி வரும், கு. இளங்கோவனை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேலாண் இயக்குநராக (முழு கூடுதல் பொறுப்பு) நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் இன்று (நவ. 18) பொறுப்பேற்றுக் கொண்டார்.