சென்னை கொடுங்கையூர் ஆர்ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் விக்னேஷ் (15). தாய் தந்தை உயிரிழந்த நிலையில் தனது அக்கா மேகலா வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று (பிப். 14) வட சென்னையில் மெட்ரோ ரயில் திறக்கப்பட்ட நிலையில், தனது நண்பர்கள் மூன்று பேருடன் கொடுங்கையூர் பகுதியிலிருந்து விம்கோ நகர் வரை இலவசமாக பயணிப்பதற்காக வந்துள்ளார்.
பின்னர் அங்கு இறங்கி கடற்கரை பகுதிக்கு சென்ற சிறுவர்கள் கடலில் குளித்து சென்றபோது, ராட்சத அலையில் சிக்கி மூன்று பேரும் இழுத்துச் செல்லப்பட்டனர். சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த மீனவர்கள் இரண்டு பேரை மீட்ட நிலையில், விக்னேஷ் மட்டும் அலையில் சிக்கி மாயமானார்.
இரவு முழுவதும் தேடி உடல் கிடைக்காத நிலையில், இன்று (பிப். 15) காலை சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு மீட்பு குழுவினர் வருகை கடலில் தேடிய போது, சிறுவனின் உடல் கண்டறியப்பட்டது. பின்னர் உடலை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் மெட்ரோ ரயில் காண்பதற்கு செல்வதாக கூறி விட்டு வந்த சிறுவர் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்று விற்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க...தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது!