ETV Bharat / state

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் அறிவிப்பு! - காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை செயல்படும் என அறிவிப்பு

சென்னை: செப்டம்பர் ஏழாம் தேதி முதல் தகுந்த இடைவெளியைக் கடைபிடித்து குறைந்த அளவு பயணிகளுடன் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னை மெட்ரோ ரயில் சேவை செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

metro
metro
author img

By

Published : Sep 3, 2020, 4:06 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில் செயல்படுவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ரயில்களின் பயண நேரம் குறித்த தகவல்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " செப்டம்பர் ஏழாம் தேதி முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும். பின்னர் தேவைக்கு ஏற்ப சேவை நேரம் நீட்டிக்கப்படும். சென்னை விமான நிலையத்திலிருந்து வண்ணாரப்பேட்டை வரை செல்லும் நீல நிற வழித்தடத்தில் 7ஆம் தேதி முதல் ரயில் சேவை இயக்கப்படும்.

அதேபோல், பரங்கிமலையிலிருந்து எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் 9ஆம் தேதி (புதன்கிழமை) முதல் ரயில் சேவை தொடங்கப்படுகிறது. எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் வழித்தடத்திற்கும், விமான நிலைய வழித்தடத்திற்கும் இடையே ரயில் சேவைகள் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 'பீக் ஹவர்ஸ்' எனும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையும், மாலை 5 முதல் 8 மணி வரையும் 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் ரயிலில் இருந்து இறங்கும் போதும் ஏறும் போதும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றுவதற்காக ரயில்கள் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் 50 விநாடிகள் நின்று செல்லும். கிருமி நாசினி கொண்டு ரயில் நிலையம் அவ்வப்போது சுத்தம் செய்யப்படும்.

மேலும், ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்துப் பயணிகளும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்யப்படுவர். உடல் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் பயணிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்படுவர். ஸ்மார்ட் கார்டு மற்றும் QR ஸ்கேன் முறையில் டிக்கெட் வழங்கப்படும்.

லிப்ட்டில் ஒரே நேரத்தில் அதிகபட்சம் மூன்று பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தனி மனித இடைவெளியைப் பின்பற்றும் வகையில், ரயில் இருக்கைகளில் ஒரு இருக்கை இடைவெளி விட்டு பயணிகள் அமர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.