சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி ‘சென்னை மாரத்தான்’ போட்டி நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச தடகள வீரர்கள் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாராத்தான் போட்டிக்குப் புதிய ஸ்பான்சராக ‘Fresh works inc' எனும் தனியார் நிறுவனம் சேர்ந்துள்ளது.
இந்த மாரத்தான் சர்க்கரை நோய் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெறுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இன்சூலின் தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த மாராத்தான் போட்டியில் கிடைக்கும் நிதியைத் திரட்டி வழங்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலஆண்டுகள் புகழ்பெற்ற இந்த சென்னை மாரத்தான் தமிழ்நாட்டில் மாபெரும் ஓட்டப்போட்டி நிகழ்வாகவும், இந்தியாவில் இரண்டாவது ஓட்டப்போட்டி நிகழ்வாகவும் திகழ்கிறது. இந்த மாராத்தான் போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த தடகள வீரர்கள் பங்குபெறுவர்.
இந்த மாரத்தான் பந்தயத்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மொத்தம் மூன்று நிகழ்வுகள் வகுக்கப்பட்டுள்ளது. அவை, முழு மாராத்தான்(42.195 கி.மீ); தி பெர்ஃபெக்ட் 20 மில்லர்(32.186 கி.மீ) இது 2019ஆம் ஆண்டு முதல்முறையாக இப்போட்டியில் அறிமுகப்படுத்தப்பட்டது; பாதி மாராத்தான்(21.097 கி.மீ), மற்றும் 10 கி.மீ ரன்.