ETV Bharat / state

விடிய விடிய மது விற்பனை : தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு.! - chennai hotels

பார்களில் மதுபான விற்பனையின் போது உரிம நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 25, 2023, 7:47 PM IST

சென்னை: தமிழ்நாடு மதுபான விற்பனை உரிம விதிகளின்படி, மது விற்க உரிமம் பெற்ற கிளப்கள், ஹோட்டல்கள் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டும் மது விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த விதிகள் முறையாக பின்பற்றப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடில் உள்ள ஏராளமான கிளப்கள் மற்றும் ஹோட்டல்கள் அரசு விதித்த நிபந்தனைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல இயங்கி வருவதாகவும், உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கும் கிளப்களில் மதுபானங்கள் வழங்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரான சுரேஷ் பாபு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார். அந்த மனுவில், கிளப்கள், ஹோட்டல்களில் அரசால் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி அதிகாலை 3 மணி வரைக்கும் மதுபானங்களை விற்று வருவதாக புகார் தெரிவித்திருந்தார். மேலும் இது குறித்து போலீஸ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவின் மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் கீழ் உள்ள நீதிபதிகள் புகழேந்தி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் தமிழ்நாடு முழுவதும் உரிமம் பெற்றுள்ள கிளப்கள், ஹோட்டல்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்த வேண்டும் எனவும், விதியை மீறி செயல்படும் கிளப்புகள் மற்றும் ஹோட்டல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. மேலும், இது குறித்து தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வாதாடிய துறைசார் அரசு வழக்கறிஞர், தமிழ்நாடு முழுவதும் உள்ள கிளப்கள் மற்றும் ஹோட்டல்கள் உரிம நிபந்தனைகள்படி செயல்படுகின்றனவா? இல்லையா? என ஆய்வு செய்யும்படி மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆய்வுக்கு பிறகு இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் முறையாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் கிளப்புகள் மற்றும் ஹோட்டல்களில் அரசின் உரிம நிபந்தனைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அது தொடர்பான ஆவணங்களை இரண்டு வாரங்களில் அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கு,விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் மது, சிகரெட்டுடன் ஆபாச நடனம்.. கொந்தளித்த பெண்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.