ETV Bharat / state

சென்னை கீழ்பாக்கம் மருத்துவர் சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கத்தால் பரபரப்பு!

அரசு ஊழியர் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ஏபிவிபி தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளரும், அரசு கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் துறை தலைவருமான மருத்துவர் சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவர் சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கத்தால் பரபரப்பு!
சென்னை கீழ்பாக்கம் மருத்துவர் சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கத்தால் பரபரப்பு!
author img

By

Published : Feb 18, 2022, 10:46 PM IST

சென்னை: தஞ்சாவூர் அருகே விடுதியில் மாணவி ஒருவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சமீபத்தில் ஏபிவிபி அமைப்பினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். இது தொடர்பாக 33 பேர் கைதுசெய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஏபிவிபி தேசிய செயற்குழுச் சிறப்பு அழைப்பாளரான மருத்துவர் சுப்பையா சண்முகம், நிதி திரிபாதியை நேரில் சந்தித்து நேற்று (பிப்ரவரி 17) ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியைச் சந்திக்க ராஜ்பவன் சென்ற ஐந்து பேர் குழுவில், இவரும் இடம் பெற்றிருந்தார்.

மருத்துவர் சுப்பையா சண்முகம் தற்போது சென்னை ராயப்பேட்டை புற்றுநோய் துறை தலைவராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் அரசு ஊழியர் ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சுப்பையா சண்முகம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

துறை ரீதியான விசாரணை நடைபெற்று, மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு பொருந்தும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஒன்றில் பெண்ணின் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்த பிரச்சினையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கன்னக்குழி சிரிப்பால் கவி பேசும் தேவதை கீர்த்தி ஷெட்டி புகைப்படத் தொகுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.