ETV Bharat / state

மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் தீவிரம்... புயலில் இருந்து புத்துயிர் பெறுமா சென்னை? - மிக்ஜாம் புயல்

Recovering from Michaung Cyclone: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

michaung-storm-rescue-work-is-intense
மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் தீவிரம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2023, 6:17 PM IST

மிக்ஜாம் புயல் மீட்பு பணிகள் தீவிரம்...

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னையில் மட்டும் 450க்கும் மேற்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. இதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்த பொதுமக்கள் குடிநீர், உணவு, மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வரமுடியாமல் கடும் சிரமம் ஏற்பட்டது.

இதனிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், வேளச்சேரியில் விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு மற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போர்க்கால நடவடிக்கை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று (டிச.09) காலை 10 நிலவரப்படி 55 நிவாரண முகாம்களில் 12,566 நபர்கள் தங்க வைத்துள்ளனர். 2,62,608 பிரட் பக்கெட்டுகள், 9,64,550 குடிநீர் பாட்டில்கள், உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், புயலின் போது அடித்த பலத்த காற்றில் மொத்தம் 1,512 மரங்கள் சாய்ந்தது இதில், 1,302 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அதே போல், சென்னை முழுவதும் மொத்தம் 363 இடங்களில் மழைநீர் தேங்கியது, தற்போது 35 இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதையில், முழுவதுமாக போக்குவரத்துக்கு நடைபெற்று வருகிறது. மேலும், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் 39 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன என மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வடிந்த பகுதிகளில், கொசு மருந்து, பீளீச்சிங்க் பவுடர், மற்றும் கிருமி நாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும், சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் மருத்து முகாம் நடைபெற்று வருகிறது.

தூய்மை பணியாளர்களின் பணிகள் தீவிரம்: பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் தொடர்ந்து 15 மண்டலங்களிலும் தூய்மை பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக, வளசரவாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்: 151, SVS நகர் பிரதான சாலையில் தேங்கியுள்ள மழை நீரை 100 HP திறன், 48 HP திறன் மோட்டார்கள் மூலம் இடைவிடாது மழைநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல், அம்பத்தூர் கோட்டம், கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு கண்ணகி தெருவில் மிக்ஜாம் புயல் காரணமாகத் தேங்கியுள்ள குப்பைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணியானது நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி; வாகன ஓட்டிகள் மீதான 6,670 வழக்குகள் ரத்து - போக்குவரத்து காவல்துறை அதிரடி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.