ETV Bharat / state

சோலார் மின்சாரத்தை சேமித்து வைக்கும் பேட்டரி; ஐஐடி பேராசிரியரின் கண்டுபிடிப்பு

சென்னை ஐஐடியில் சூரியசக்தியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, பெரிய தொழில் நிறுவனங்கள் சேமித்து வைத்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியை ஐஐடி பேராசியர் கண்டுபிடித்துள்ளார்.

ஐஐடி பேராசிரியரின் கண்டுபிடிப்பு
ஐஐடி பேராசிரியரின் கண்டுபிடிப்பு
author img

By

Published : Dec 9, 2022, 6:39 PM IST

சென்னை: ஐஐடியின் ஆராய்ச்சி மையத்தின் மூலம் பல்வேறு துறைகளில் சமூகத்திற்கு தேவையான கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், சூரியசக்தியில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கான வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி (vanadium redox flow battery) தொழில்நுட்பத்தை ஐஐடியின் வேதியியல் துறையின் பேராசிரியர் கோதண்டராமன் வடிவமைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ”வெனடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி எரிசக்தியை சேமித்து வைப்பதற்கு பயன்படுத்தப்படுவது. வழக்கமாக பயன்படுத்தப்படும் பேட்டரியில், ஆக்டிவ் மெட்டிரியல் உள்ளேயே இருக்கும். ஆனால் ரெடாக்ஸ் ப்ளோ பேட்டரியில் ஆக்டிவ் மெட்ரியில் தனியாக கீழே இருக்கும். அதனால் ஆக்டிவ் மெட்ரியல் டேங்கை பூமிக்கு கீழேயே வேறு இடத்திலும் பாதுகாப்பாக, வெளியில் தெரியாத வகையில் வைத்துக் கொள்ளலாம். பேட்டரி மட்டும் தான் மேலே இருக்கும்.

இந்த பேட்டரியில் எரிசக்தியை பிரித்து வைத்துக் கொள்ள முடியும். பேட்டரி அளவையும், டேங்கின் அளவையும் அதிகரித்தால் சேமிக்கும் மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும். மின்சாரத்தை சேமித்து வைத்து பயன்படுத்தும் வசதியை வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் பயன்படுத்த முடியும்.

வரும் காலத்தில் மரபு சார எரிசக்தியை அதிகரித்துக் கொண்டே செல்லும் போது, காற்று, சூரிய ஒளி மின்சாரத்தை சேமித்து வைக்க தேவைப்படும். அதற்கு இந்த சிஸ்டம் பயனுள்ளதாக இருக்கும். மின்சார உற்பத்தி அதிகமாக இருக்கும் போது, இந்த பேட்டரியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தியை ஒரு யூனிட் 2 ரூபாய்க்கு செய்யும் போது, சேமித்து வைப்பதற்கான செலவு 15 ரூபாய் ஆகிறது. இதனை பயன்படுத்துவதற்கு விலையை குறைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

தனது கண்டுபிடிப்பு குறித்து விளக்கும் ஐஐடி பேராசிரியர்

இதையும் படிங்க: ட்ரோன் மூலம் மருந்துப்பொருட்கள் டெலிவரி - டாடாவின் திட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.