ETV Bharat / state

ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு: முன்னாள் உதவிப் பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்

ஐஐடி சென்னையில் சாதி பாகுபாடு இருப்பதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் முன்னாள் உதவிப் பேராசிரியர் விபின், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் உதவி பேராசிரியர் பிரதமருக்கு கடிதம்

author img

By

Published : Feb 5, 2022, 4:48 PM IST

சென்னை: சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் உதவிப் பேராசிரியரான 'விபின் பி வீட்டில்’ (vipin p veetil), கல்வி நிறுவனத்தில் சாதி பாகுபாடு நிலவுவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் எனப் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அந்தக் கடிதத்தில் விசாரணை முடியும்வரை அந்நிறுவனத்திலுள்ள இரண்டு அலுவலர்களைப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தனது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தின் பாகுபாடு வழக்கை மறுவிசாரணை செய்ய வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஐஐடி சென்னையிலுள்ள மூத்த பிராமண ஆசிரியர்கள், பெரும்பான்மையான பிராமண நிர்வாகத்தால் பாகுபாடு, துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகவும், இந்த பாகுபாடுதான் நிறுவனத்திலிருந்து ராஜினாமா செய்ய வழிவகுத்தது எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தில் (NCBC) அவர் புகார் செய்ததைத் தொடர்ந்து, விசாரணை நடத்த ஆணையம் நிறுவனத்திடம் கூறியது. மேலும் அக்டோபர் 2021ஆம் ஆண்டு விசாரணை முடிவடைந்ததிலிருந்து, அப்போதைய நிறுவன இயக்குநராலும், மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவராலும் இடைவிடாமல் துன்புறுத்தப்பட்டதால், தான் ராஜினாமா செய்ய நேரிட்டதாகவும் கூறியுள்ளார்.

நிறுவனத்தில் பட்டியிலன மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆள்சேர்ப்பு இயக்கத்தின் நாசவேலை குறித்து இந்திய அரசால் விசாரிக்கப்பட வேண்டும் எனக் கடிதத்தின் வாயிலாக அழைப்புவிடுத்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம் தனது விசாரணையை முடிக்கும்வரை மனிதநேயம், சமூக அறிவியல் துறையின் தலைவர் ஜோதிர்மயா திரிபாதி மற்றும் ஆளுநர்கள் குழுவின் உறுப்பினரான முரளிதரன் தங்களது பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், பிப்ரவரி 24ஆம் தேதி நிறுவனத்தின் நிர்வாகக் கட்டடம் முன்பு 'நிராஹாரா சத்தியாகிரகம்' தொடங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'புத்தகக் கண்காட்சியில் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனையாகும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.