சென்னை காவல்துறைக்குச் சொந்தமான குதிரைப்படை பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டுவருகிறது. இதிலுள்ள 35 குதிரைகளை முப்பது குதிரை மேய்ப்பாளர்கள் கவனித்து வருகின்றனர். தற்போது மேய்ப்பாளர்கள் பாதிக்கு மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சில மேய்ப்பாளர்களுக்கு அறிகுறிகள் இருந்தாலும் தொடர்ந்து வேலையில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. குறிப்பாக, குதிரை மேய்ப்பு வேலையைத் தவிர மற்ற எடுபிடி வேலைகளுக்கும் இவர்களைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும் கட்டட வேலைகள் உள்ளிட்ட வேலைகளை மேற்கொள்ள வைப்பதும், அதற்குண்டான பணத்தை சில அலுவலர்கள் கையாடல் செய்வதும் நிகழ்வதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து புகாரளிக்க உயர் அலுவலர்கள் சந்திக்க அனுமதிப்பதில்லை என்றும், குடும்ப சூழ்நிலை காரணமாக அடிமை போல் வேலை பார்ப்பதாகவும் ஊழியர்கள் வருத்ததுடன் தெரிவித்துள்ளனர். சென்னை காவல்துறையிலேயே கரோனா காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் வேலை பார்ப்பவர்களை நடத்தம் அவலம் அரங்கேறுவது அதிருப்தி அளிப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலை: மாசிமகம் கோலாகல கொண்டாட்டம்