மதுரையில் சித்திரைத்திருவிழாவை முன்னிட்டு மக்களவைத்தேர்லை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு மற்றும் பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்துக்கு மாற்றக்கோரிய வழக்கு ஆகியவற்றின் வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, பண்டிகைக்காக பொது விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், அனைவரும் வாக்களித்துவிட்டு தங்கள் பணியை தொடரலாமே என கேள்வி எழுப்பியது.
மேலும், மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளதோ, அதேபோன்றுதான் தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாகக் கருத வேண்டும் என கருத்து தெரிவித்து, வழக்கின் தீர்ப்பை இன்றைக்கு (மார்ச் 22) ஒத்திவைத்து உத்தரவிட்டது.