1998ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் கைதியாக அல் -உம்மா தலைவர் பாட்ஷா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
20 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி அவரது மகள் முபீனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், சிறையில் உதவியாளர் இல்லாமல் எந்தப் பணிகளையும் செய்ய முடியாத நிலையில் உள்ள தன் தந்தையை கவனித்து சிகிச்சை வழங்கவும், குடும்ப விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கவும், தன் தந்தைக்கு பரோல் வழங்க வேண்டும் என அவர் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்திய நாரயணன், நீதிபதி நிர்மல்குமார் அடங்கிய அமர்வு, இந்த மனுவிற்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டுமென தமிழ்நாடு உள் துறை செயலர், சிறைத் துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.