ETV Bharat / state

'நேர்கொண்ட பார்வை'... தமிழ்ராக்கர்ஸுக்கு தடா!

சென்னை: அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Aug 6, 2019, 5:19 PM IST

NKP

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் நடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் பே வியூ (Bay View) புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை ஆயிரத்து 129 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளதோடு, படம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காப்புரிமைகளும் தங்கள்வசமுள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவிகளிலோ படத்தை வெளியிட்டால் அது மிகப்பெரிய மன உளைச்சலையும், பொருளாதார ரீதியாக நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என வாதிட்டார்.

மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Intro:Body:அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "நேர்கொண்ட பார்வை" படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், டெல்லி கணேஷ் நடித்துள்ள படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் பே வியூ (Bay View) புராஜெக்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 100 கோடி ரூபாய் தயாரிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள படத்தை ஆயிரத்து 129 இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது,
மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளதோடு, படம் சம்பந்தப்பட்ட அனைத்துக் காப்புரிமைகளும் தங்கள் வசம் உள்ள நிலையில், சட்டவிரோதமாக இணையதளங்களிலோ அல்லது கேபிள் டிவி-களிலோ படத்தை வெளியிட்டால் அது மிகப்பெரிய மன உளைச்சலையும், பொருளாதார ரீதியாக நஷ்டத்தையும் ஏற்படுத்தும் என வாதிட்டார்.

மனுதாரர் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நேர்கொண்ட பார்வை படத்தை இணையதளங்களில் வெளியிடுவதை தடுக்க இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.