சென்னை, புறநகா் பகுதிகளில் நேற்று (அக்டோபர் 28) இரவிலிருந்தே மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையிலிருந்து பெங்களூரு, சேலம், பூனே, கவுகாத்தி, அந்தமான், டில்லி ஆகிய உள்நாட்டு விமானங்களும், லண்டன், தோகா செல்லும் சா்வதேச சிறப்பு விமானங்களும் அரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
மழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, விமானிகள், விமான ஊழியா்கள் தாமதமாக வந்ததாலும், அதேபோல் விமானங்களில் பயணிகள் உடமைகளை ஏற்றுவதில் ஏற்படும் தாமதத்தாலும் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னைக்கு வந்து தரையிறங்கும் விமானங்கள் இதுவரை காலதாமதம் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்