கரோனா வைரஸ் தொற்றை விரைந்து கண்டறிவதற்கான ரேபிட் டெஸ்ட் கிட் சீனாவிலிருந்து ஏர் இந்தியா கார்கோ விமானம் மூலம் நேற்று டெல்லிக்கு வந்தது. இதைடுத்து, ரேபிட் டெஸ்ட் கிட் உபகரணங்கள் சென்னை விமான நிலையத்திற்கு வரும் என சென்னை விமான நிலைய அலுவலர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னை வந்த கார்கோ விமானத்தில் இங்கிலாந்திலிருந்து அனுப்பப்பட்ட கையுறை, முகக்கவசங்கள் அடங்கிய 99 பார்சல்களும், சீனாவிலிருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய 47 பார்சல்களும் மட்டுமே வந்துள்ளதாகவும், கரோனா பரிசோதனையை விரைவில் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கிட் வரவில்லை எனவும் சுங்கத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
![chennai does not get any rapid covid 19 testing kits from delhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-rabbitkit-doesnot-comefromdelhi-photos-script-7208368_17042020095956_1704f_1587097796_855.jpg)
பின்னர், இவை ஆய்வுசெய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டன.
இதையும் படிங்க: சீனாவிடமிருந்து 5 லட்சம் துரித பரிசோதனை கருவிகள் பெறப்பட்டன - சுகாதாரத்துறை