சென்னையில் 42 வயதான அரசு பொது மருத்துவர் ஒருவர், கடந்த எட்டாம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளுடன் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சைக்குப் பிறகான பரிசோதனையில் கரோனா தொற்றிலிருந்து, அவர் முற்றிலும் மீண்டது தெரிய வந்ததையடுத்து இன்று அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அவரை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் நாராயணசாமி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: சாதுக்கள் கொலை: டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியது மனித உரிமைகள் ஆணையம்!