சென்னை: தீபாவளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன்படி, இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையின் நுங்கம்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, ராயப்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், அமைந்தகரை, சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியான முகப்பேர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, அயப்பாக்கம், திருமுல்லைவாயில், பட்டாபிராம் மற்றும் திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் பெரும்பாலானோர் வெடி வெடித்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது.
அதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனிடையே சென்னை தீபாவளி கொண்டாட்டம் குறித்த கழுகுப் பார்வையிலான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பட்டாசு வெடிப்பதில் தகராறு; இளைஞரைத் தாக்கிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்கு