சென்னை துரைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “அரசு உதவி பெறும் துறைகளில் அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தில் மாணவர்களை சேர்க்க மறுத்து, சுயநிதி கட்டணத்தில் மட்டுமே டி.பி.ஜெயின் கல்லூரியில் மாணவர்களை அனுமதிக்கின்றனர்.
இதனால் சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசு உதவி பெறும் டி.பி.ஜெயின் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே இக்கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா ஆளுநர்? - அமைச்சர் பொன்முடி கேள்வி