குவைத்திலிருந்து சென்னைக்கு கோ ஏா்லைன்ஸ் சிறப்பு மீட்பு விமானம் நேற்று (செப்டம்பர் 7) சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.
அந்த விமானத்தில் 164 இந்தியர்கள் மீட்டு கொண்டுவரப்பட்டனர். அவர்களை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.
அப்போது திருச்சியைச் சோ்ந்த பயணி ஒருவர் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தப் பயணியின் உடமைகளை முழுவதுமாகப் பரிசோதித்தனா்.
அவருடைய கைப்பைக்குள் இருந்த ரகசிய அறைக்குள் மறைத்துவைத்திருந்த 3 தங்கக்கட்டிகளைப் பறிமுதல்செய்தனா். அவைகளின் மொத்த எடை 383 கிராம்.
இதன் சா்வதேச மதிப்பு ரூ.19.34 லட்சம். இதையடுத்து சுங்கத் துறையினர் அந்தப் பயணியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.