சென்னையில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றினால் 200 ரூபாயும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் சென்றால் 500 ரூபாயும் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, துணை ஆணையர்கள் மேற்பார்வையில் வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணியாமலும், தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமலும் வெளியே சுற்றினால் போக்குவரத்து காவல் துறையினர் அபராதத் தொகையை வசூலித்து வந்தனர்.
அதனடிப்படையில் கடந்த மாதம் 29ஆம் தேதி முதல் நேற்று வரை, முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 4 ஆயிரத்து 113 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 7 ஆயிரத்து 23 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் வசூலித்துள்ளனர். அதே போல் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்காமல் வாகனங்களில் சென்றதாக 101 வழக்குகள் பதிவு செய்து 50ஆயிரத்து 500 ரூபாயை போக்குவரத்து காவல் துறையினர் வசூலித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:
சிறுவர் சீர்திருத்த பள்ளி ரகளை ; மாவட்ட முதன்மை நீதிபதி விசாரணை!