ETV Bharat / state

ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்.. - suspend

சென்னையில் இணையதள மோசடி, வழிப்பறி, பாலியல் வன்முறை, தற்கொலை, வரதட்சணை என அடுக்கடுக்காக நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

chennai crime news
சென்னை குற்றச்செய்திகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 1:10 PM IST

சென்னை: டிஎஸ்பி சமூக வலைதள பக்கங்களை போலியாக சித்தரித்து மோசடியில் ஈடுபட முயற்சி:

தமிழ்நாடு காவல்துறையில் பாதுகாப்பு பிரிவு சிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் துரைப்பாண்டியன். இந்த நிலையில் அவரது தொலைபேசி எண்ணில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஐடியில் துரைப்பாண்டியன் பெயர் புகைப்படம் மற்றும் பதவியை சிலர் போலியாக பயன்படுத்தி அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றில் தொடர்பு கொண்டு பண உதவி கேட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து கொண்ட துரைபாண்டியன் அதிர்ச்சியடைந்து, பின்னர் இது குறித்து சமூக வலைதள பக்கங்களை போலியாக சித்தரித்து பயன்படுத்திய நபர்கள் மீது தந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனது சமூக வலைதள கணக்குகளை போலியாக பயன்படுத்துவதை முடக்கவும் அபிராமிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த புகார் அடிப்படையில் சிஎஸ்ஆர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த காவலர் தற்கொலை முயற்சி:

திருப்பத்தூர் மாவட்டம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி. இவர் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் சென்னை கொண்டிதோப்பு காவலர் குடியிருப்பில் தற்போது வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி முதல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பணி செய்துள்ளார்.

இதையடுத்து கடந்த 24 ஆம் தேதி காலை 7 மணிக்கு முதல் மதியம் 1 மணி வரை பணி செய்து விட்டு மாலை சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் தனது சொந்த ஊருக்குச் சென்ற முரளி தனது வீட்டில் தற்கொலை முயற்சி செய்துவிட்டு உறவினர்களுக்கு செல்போன் மூலம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தகவலறிந்து அவரை மீட்ட உறவினர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்த போது, முரளி தினமும் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் அதிக அளவில் பணத்தை இழந்து விட்டதும் மற்றும் மேலும் லோன் எடுத்து அந்தப் பணத்தையும் இழந்து உள்ளார்.

இதனால் அந்த கடன் தொகையை அடைப்பதற்காக வீட்டில் உள்ள நிலத்தை விற்று தருமாறு பெற்றோர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் நிலத்தை விற்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவலர் முரளி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்
தற்கொலை எண்ணத்தை கைவிடுங்கள்

செல்போனை பறித்து ஓடிய மர்ம நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்:

சென்னை திருவல்லிக்கேணி ரோட்டரி நகர் 1 ஆவது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்(19.) இவர் நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு போதையில் ராயப்பேட்டை நடேசன் சாலையில் ஓரம் அமர்ந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் சந்தோஷ் போதையில் இருப்பதை அறிந்து கொண்டு அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனால் சந்தோஷ் சத்தம் போட்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்து ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சென்னை பிஎம் தர்கா குடிசை பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(19) என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கணவர் (காவலர்) மீது பெண் காவலர் புகார்:

சென்னை ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மகாராஜா, ஜீவா தம்பதி. மகாராஜா சென்னை மண்டல குற்றப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் ஜீவா வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

மேலும் இவர்களுக்கு எட்டு மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி மகாராஜா அவரது மனைவி ஜீவாவிடம் உங்கள் வீட்டில் நகை, பணம் பொருட்கள் திருமணத்திற்கு குறைவாக கொடுத்துள்ளீர்கள் எனக் கூறி தகராறு செய்துள்ளார். மேலும் வரதட்சணை கேட்டு ஜீவாவை கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஜீவா ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மேலும் இது குறித்து மருத்துவமனையில் புகார் பெற்று சென்னை ஆயிரம் விளக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவல் அடிப்படையில் போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு வருடத்திற்கு முன்பு கணவர் மனைவியே இடையே ஏற்பட்ட பிரச்சனையில் மகாராஜா வீட்டில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகாரில் பணியிடை நீக்கம்: சென்னை ஆயிரம் விளக்கு கொச்சின் ஹவுஸ் காவலர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பவித்திரன், மோனிகா தம்பதி. தற்போது பவித்திரன் வியாசர்பாடி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வியாசர்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த நதியா என்பவர் பவித்ரன் மீது பாலியல் புகார் அளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் பவித்ரன் பணியிட நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் காவலர் நதியா மற்றும் அவரது சகோதரர் சதீஷ் என்பவரும் பவித்திரனின் வழக்கறிஞரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பவித்ரன் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யக்கூடாது எனவும், அவர்களை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் பவித்ரன் இடம் தெரிவித்துள்ளார். இதனால் பவித்திரனின் மனைவி மோனிகா இது குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு அலுவலகத்தில் மீண்டும் மோனிகா புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், காவலர் நதியா மற்றும் அவரது சகோதரர் சதீஷ் இருவரும் தனது கணவர் பவித்திரனையும், தன்னையும் தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர். மேலும் தங்கள் வழக்கறிஞரையும் அவர்கள் மிரட்டி வருகின்றனர். இதனால் தங்கள் குடும்பம் மிகுந்த மன உளைச்சலில் இருக்கின்றோம். மேலும் கடந்த 5 ஆம் தேதி சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் காவலர் நதியா மற்றும் அவரது சகோதரர் மீது அளித்த புகார் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று சேரவில்லை.

தான் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இந்த புகார் தொடர்பாக தங்கள் குடும்பம் மிகவும் மன உற்சாக இருப்பதாகவும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தானும் தனது கணவர் குழந்தை மரணத்திற்கு தமிழ்நாடு காவல்துறை தான் காரணம் என கடிதம் எழுதி முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார். இதனால் இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இந்த புகார் மனு அனுப்பி வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்.. யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து காதலி வீட்டில் வீசிய இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.