ETV Bharat / state

மருத்துவமனையில் பல நாள் திருடன் சிக்கியது முதல்.. சிஐஎஸ்எஃப் வீரர் தற்கொலை வரை சென்னை குற்றச் செய்திகள்! - தற்கொலை

Chennai crime news: மருத்துவமனைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே கொள்ளையன் கைது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை குறித்த விரிவான செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

tamilnadu crime news
tamilnadu crime news
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 10:11 PM IST

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சண்டி தாஸ் பிஸ்வாஷ்-சிரபந்தி தம்பதியினர். சிரபந்திக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சைக்காக 30 ஆயிரம் ருபாய் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு சிரபந்தி அணிந்திருந்த 30 சவரன் தங்க நகை மற்றும் அவர்கள் சிகிச்சையாக கொண்டு வந்த 30 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை அவர்கள் கொண்டு வந்த பையில் வைத்து கட்டி வைத்துவிட்டு அறையில் இருவரும் உறங்கியுள்ளனர்.

பின்னர், காலை எழுந்து பார்த்தபோது அவர்கள் நகை பணம் வைத்திருந்த பை காணாமல் போய் உள்ளதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக கீழ்ப்பக்கம் காவல் நிலையத்தில் சண்டி தாஸ் பிஸ்வாஷ் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் மருத்துவமனையில் திருட்டில் ஈடுபட்டு வந்தவர் மருத்துவமனைகளில் திருடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த பழைய திருடன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபர் எடுத்துச் சென்ற இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், அதில் போலி முகவரியை வைத்து வண்டி வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

பின்னர், போலீசார் அந்த வண்டி வாங்கிய ஷோரூமிற்கு சென்று திருடனின் தொலைபேசி எண்ணை வாங்கி உள்ளனர். மேலும் அந்த எண்ணை வைத்து சோதனை மேற்கொண்டதில் அந்த நபர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொமேட்டோ ஊழியர் உதவியுடன் சென்ற போலீசார் பட்டாபிராம் பகுதியில் வீட்டில் பதுங்கி இருந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரனை மேற்கொண்டதில் சிறு வயதில் இருந்தே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகத்தில் பல ஊர்களில் மருத்துவமனையில் திருடி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடமிருந்து சுமார் 30 சவரன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் தற்கொலை: மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமார் (38). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலராக பணிபுரிந்து வந்து நிலையில் கடந்து ஆறு மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பாதுகாப்பு பணியில் குமார் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை நேரத்தில் அவரின் பணி முடிந்து மாறுதலுக்காக ராஜ் என்பவர் சென்று உள்ளார். அப்போது குமார் தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின், உடனடியாக ராஜ் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

Suicide is not the solution
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

பின்னர், இது குறித்து மீஞ்சூர் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து குமார் பணி சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில் இருந்து இலங்கை செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.