ETV Bharat / state

சென்னையில் கொசு ஒழிப்பு பணி தீவிரம்.. 3,300 பேரை களமிறக்கிய மாநகராட்சி! - chennai corporation mosquito complaint

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3,300 பணியாளர்களைக்கொண்டு தீவிர கொசு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி 3,300 பணியாளர்களோடு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரம்

author img

By

Published : Feb 15, 2023, 7:21 AM IST

சென்னை: சென்னையில் கொசுத் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடம் இருந்து அதிகமான புகார்கள் வந்துள்ளது. இதனால் மாநகராட்சி கொசு ஒழிப்புப் பணியைத் தீவரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத் திங்கட்கிழமை ஒரே நாளில் மட்டும் மழைநீர் வடிகாலில் 280 கி.மீ. நீளத்திற்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 304 கி.மீ நீளத்திற்குக் கொசு ஒழிப்பு புகை பரப்பியும், நீர்நிலைகளில் 65.22 கி.மீ. நீளத்திற்கு ட்ரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், 3,671 தெருக்களில் வாகனங்கள் மற்றும் கையினால் இயக்கும் இயந்திரங்கள் மூலம் கொசு ஒழிப்புப் புகை பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 71 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கு அனுப்பப்பட்டது.

தீவிர கொசு ஒழிப்புப் பணிகளுக்காக 3,300 பணியாளர்கள் மாநகராட்சி சார்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் கொசு ஒழிப்புப் பணியாளர்கள் 800 நபர்கள் சுழற்சி முறையில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளிலும் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இப்பணிகளை மண்டலக்குழுத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அந்தந்த பகுதிகளில் உள்ள மக்கள் பிரதிநிதிகள், முக்கியப் பிரமுகர்கள் பார்வையிட்டு பணிகளைத் துரிதப்படுத்த உள்ளனர். மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும் இணைந்து தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் கொசுக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள் குறித்து பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது

இதையும் படிங்க: சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை விவகாரம்; மாணவர் ஆசிரியர் நல்லுறவு மேம்படுத்த நடவடிக்கை - இயக்குநர் காமகோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.