ETV Bharat / state

சென்னை மாநகராட்சி வலைதள டெண்டர் ரத்து? - chennai district news

சென்னை மாநகராட்சியின் சமூக வலைதள பக்கங்களை பராமரிக்க வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

chennai corporation tender issue
chennai corporation tender issue
author img

By

Published : Jul 9, 2021, 6:27 PM IST

சென்னை : மாநகராட்சி அதிகாரப்பூர்வ இணையதளம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக வலைதளத்தை ஒரு வருடம் கையாள்வதற்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அன்று இணையதளத்தின் மூலம் டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை கே.ஸ் ஸ்மார்ட் சொலியூஷன் ( k.s.smart solution) என்ற நிறுவனம் 2 கோடியே 31 லட்சத்து 26 ஆயிரத்து 761 ரூபாய்க்கு எடுத்தது.

மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்

ஒரு நிறுவனத்தின் சமூக வலைதளத்தை ஒரு வருடம் கையாள்வதற்கு இவ்வளவு பெரிய தொகை தேவையற்றது, மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என பலர் கருத்து தெரிவித்தனர்.

மேலும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், சமூக வலைதளத்தை அந்த அந்த நிர்வாகத்தின் அலுவலர்களே நிர்வகிக்கும்போது சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ஏன் வெளியில் விட வேண்டும் என கேள்வி எழுப்பினர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு

மேலும் இந்த டெண்டர் வைட் லிஸ்டிங் (whitelisting) என்ற தொழிலுட்பத்தை பயன்படுத்தி ஒரு நிறுவனத்திற்கு சென்று சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டருக்கும் ஹரிஹரன் ஐஏஎஸ், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு உள்ளதாகவும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

டெண்டர் ரத்து

இந்நிலையில், மாநகராட்சி சமூக வலைதள பக்கத்தை பராமரிக்க ஆண்டுக்கு 2.31 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்ப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் KS Solution என்ற தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. தற்போது இந்த டெண்டர் ரத்து என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இடஒதுக்கீடு தொடர்பான இஸ்லாமியர்களின் வழக்கு தள்ளுபடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.