ETV Bharat / state

சரியான நேரத்திற்கு குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வரவில்லையா ? கால் பண்ணுங்க இந்த நம்பருக்கு! - பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

குப்பை சேகரிக்கும் தூய்மை பணிகளில் ஈடுபடும் காம்பேக்டர் வாகனங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் வந்து குப்பையை அகற்றவில்லையெனில் பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

author img

By

Published : Dec 9, 2021, 11:03 AM IST

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் தினமும் சேகரிக்கப்படும் சுமார் 5100 மெட்ரிக் டன் அளவிலான குப்பைகள் மூன்று சக்கர மிதிவண்டிகள், பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மற்றும் காம்பேக்டர் வாகனங்களைக் கொண்டு குப்பைகளைக் கையாளும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் தினசரி உருவாகும் குப்பையினை சேகரிக்க 14,216 காம்பாக்டர் குப்பைத் தொட்டிகளும், அவற்றை அகற்ற 261 காம்பேக்டர் வாகனங்களும் பயன்பாட்டில் உள்ளன.

  • குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்தெடுக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகிறது.
    நம் வீட்டிலேயே அதை பிரித்துவிட்டால், நேரடியாக மறுசுழற்சி மையத்திற்கு குப்பைகள் எடுத்து செல்லப்படும். மக்கும் குப்பை எப்படி உரமாக மாறுகிறது என்பதை காணுங்கள் 👇#ThooimaiChennai pic.twitter.com/sDUN2NZEEn

    — Greater Chennai Corporation (@chennaicorp) December 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பொதுமக்கள் தெரிந்துகொள்ள

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சி

இந்தநிலையில், தற்போது குப்பை அகற்றும் காம்பேக்டர் வாகனங்களின் இயக்க நேரம், வாகனங்கள் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பை அகற்றும் இடங்கள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

https://chennaicorporation.gov.in/gcc/swm_bin/ என்ற மாநகராட்சி இணையதள இணைப்பில் பொதுமக்கள் இதனைத் தெரிந்துகொள்ளலாம்.

காம்பேக்டர் வாகனங்கள்
காம்பேக்டர் வாகனங்கள்

சரியான நேரத்தில் குப்பையை அகற்ற

எனவே குப்பை சேகரிக்கும் தூய்மை பணிகளில் ஈடுபடும் காம்பேக்டர் வாகனங்கள் இணையதள அட்டவணையில் குறிப்பிட்டுள்ள இடங்களில், குறிப்பிட்ட நேரத்தில், குப்பை தொட்டிகளில் இருந்து குப்பையை அகற்றவில்லையெனில் பொதுமக்கள் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.